/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கார்ப்பரேஷன் கமிஷனரை தவறாக வழிநடத்தும் அதிகாரி!
/
கார்ப்பரேஷன் கமிஷனரை தவறாக வழிநடத்தும் அதிகாரி!
PUBLISHED ON : ஜூலை 29, 2025 12:00 AM

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''அலை அலையா வந்தவங்களை, அணை கட்டி அனுப்பியிருக்காரு பா...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில், ஒரு வாரமா முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை எடுத்துட்டு வீடு திரும்பியிருக்காரே... மருத்துவமனையில் அவரை பார்க்க அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தினமும் படை திரண்டு போயி ருக்காங்க பா...
''அவங்களை போலீஸ் அதிகாரிகளால சமாளிக்க முடியல... இத னால, அந்த பொறுப்பை, கட்சியின் தலைமை நிலைய செயல ரான, பூச்சி முருகனிடம் குடுத்திருக்காங்க பா...
''முன்னாள் முதல்வர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் இருந்தப்பவும், இவர் தான் விசிட்டர்களை கவனிச்சிருக்காரு... அந்த வகையில, முதல்வரை பார்க்க வந்த சீனியர் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியினரிடம் இனிக்க இனிக்க பேசி, 'முதல்வர் நல் லாயிருக்காரு... நீங்க வந்த தகவலை அவரிடம் சொல்லிடுறேன்... அவர் வீடு திரும்பியதும், சீக்கிரமே அறிவாலயத்துல எல்லாரையும் சந்திப்பாரு'ன்னு சொல்லி, கச்சிதமா திருப்பி அனுப்பிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த திட்டமிடலும் இல்லைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை ஆவடியில், 36 கோடி ரூபாய் மதிப்புல, வணிக வளாகத்துடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் போன மாசம் துவங்குச்சு... இன்னும் ரெண்டு மாசத்துல வடகிழக்கு பருவமழை துவங்கிடும்...
''அங்க, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க இதுவரைக்கும் எந்த நடவடிக்கை யும் எடுக்கல... இது பத்தி, ஆவடி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் நாசரிடம் கேட்டா, 'பஸ் ஸ்டாண்ட் வேணும்னா, மக்கள் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்'னு சிம்பிளா சொல்லிட்டு போயிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதிகாரியை தவறா வழி நடத்தறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
'' துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனரா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பனோத் ம்ருகேந்தர் என்ற தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவரை, சமீபத்துல நியமிச்சா... இதுவரை பெரிய அளவிலான நிர்வாக பதவியில இவர் இருந்தது இல்ல ஓய்...
''தமிழும் சரியா தெரியாததால, ரொம்பவே திணறிண்டு இருக்கார்... இதனால, அவருக்கு துணையான அதிகாரி ஒருத்தர், கமிஷனரை தவறா வழிநடத்திண்டு இருக்கார் ஓய்...
''கான்ட்ராக்டர்களிடம் கறாரா கமிஷனை கேட்டு வாங்கணும்... நமக்கான போக்குவரத்து மற்றும் சாப்பாட்டு செலவுகளை அவங்களையே ஏத்துக்க வைக்கணும்னு சொல்றார் ஓய்...
''அதாவது பரவாயில்ல... நடந்த பணிகளுக்கு மட்டுமில்லாம, நடக்காத பணிகளை முடிச்ச மாதிரி பில்களை கொண்டு வந்தாலும், 'கமிஷனரிடம் கையெழுத்து வாங்கி தர்றது என் பொறுப்பு'ன்னும் சொல்றார் ஓய்...
''இவர் ஏற்கனவே வேலை பார்த்த இடங்கள்ல இந்த மாதிரி தில்லுமுல்லுகள்ல ஈடுபட்டு, பதவியிறக்கம் செய்யப்பட்டவர் என்பதால, இவரது பேச்சை கேட்டு நடந்தா, கமிஷனர் மாட்டிப்பார்னு நேர்மையான அதிகாரி கள் புலம்பறா... அதுவும் இல்லாம, இணை அதிகாரி, தன் ஆபீஸ் அறைக்குள்ளயே படுக்கை, சமையலறை வசதி எல்லாம் செய்து வச்சிண்டுருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்ப ண்ணா.
''சரவணன், நாளைக்கு பார்க்கலாம் பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

