sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

சுருட்டிய பணத்தில் சொகுசு ஹோட்டல் கட்டிய அதிகாரி!

/

சுருட்டிய பணத்தில் சொகுசு ஹோட்டல் கட்டிய அதிகாரி!

சுருட்டிய பணத்தில் சொகுசு ஹோட்டல் கட்டிய அதிகாரி!

சுருட்டிய பணத்தில் சொகுசு ஹோட்டல் கட்டிய அதிகாரி!

3


PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மசால் வடையை கடித்தபடியே, ''ஒருதலைபட்சமா செயல்படுறாங்கபா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''கோவை பாரதியார் பல்கலையின் விளையாட்டு துறை சார்பில், கல்லுாரிகளுக்குஇடையே விளையாட்டுபோட்டிகள் நடத்துறாங்க... இந்த போட்டிகள்ல நடுவர்களா இருக்கிறவங்க, நியாயமாதீர்ப்பு சொல்லாம, ஒருசார்பா செயல்படுறதா நிறைய புகார்கள் வருது பா...

''ஆனா, இதை பல்கலைநிர்வாகம் கண்டுக்கவே இல்ல... நடுவர்களின் தவறான தீர்ப்புகளால, மாணவர்கள் மத்தியில் மோதல்கள் வெடிக்குது பா...

''சமீபத்துல கூட ஒருவிளையாட்டு போட்டியில்,ரெண்டு தரப்பு மாணவர்களுக்கு மத்தியில அடிதடிநடந்து, ஒருத்தருக்கு மூக்கு உடைஞ்சிடுச்சு... 'இனியும், பல்கலை நிர்வாகம் கையை கட்டி வேடிக்கை பார்க்கிறது சரியில்ல'ன்னு பேராசிரியர்கள் தரப்பு புலம்புது பா...'' என்றார், அன்வர்பாய்.

''அரசுக்கு லட்சக்கணக்குல இழப்பு ஏற்படுது வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற 76 வீடுகளும், 26 வணிக வளாகங்களும் இருந்துச்சு...

''முன்னாடி, மாநகராட்சி கமிஷனரா இருந்த சிவ கிருஷ்ணமூர்த்தி, இந்த கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை எடுக்காத ரெண்டு இன்ஜினியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாரு வே...

''இப்ப, அந்த ரெண்டுஇன்ஜினியர்களும், மாநகராட்சியில் முக்கியபொறுப்புகளுக்கு வந்துட்டாவ... திருநெல்வேலியில், இப்போதைக்கு200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அனுமதி இல்லாம இருக்கு...

''இவற்றை மூடி சீல் வைக்கவோ அல்லது நோட்டீஸ் குடுத்து இடிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கல வே...

''அதுக்கு பதிலா, சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களிடம் மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், 'டீலிங்' பேசி,லஞ்சத்தை வாங்கி குவிக்காவ... இந்த கட்டடங்கள்ல இருந்து முறைப்படி வரிகள் வசூலிக்க முடியாம, அரசுக்கு லட்சக்கணக்குலநிதியிழப்பு ஏற்படுது வே...'' என்றார், அண்ணாச்சி.

''என்கிட்டயும் லஞ்ச விவகாரம் ஒண்ணுஇருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கோட்ட வருவாய் துறையில் முக்கிய அதிகாரியா இருக்கறவர்,ஏற்கனவே திருச்சி வருவாய் துறையிலும்,மாநகராட்சியிலும்பணியில இருந்தார்... அங்க, மணல் மாமூல்ல புகுந்து விளையாடினார்ஓய்...

''அப்பறமா, புரமோஷன்ல புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் அதிகாரியா வந்து, வசூலைவாரி குவிச்சார்... இது பத்தி நிறைய புகார்கள் போகவே, அங்க இருந்து இலுப்பூர் வருவாய் கோட்டத்துக்குமாத்தினா ஓய்...

''இங்கயும் அவரதுவசூல் ராஜாங்கம் கொடிகட்டி பறக்கறது... இவருக்கு நிறைய முக்கியபுள்ளிகள் பழக்கம் இருக்கறதால, தன் துறையில யாரையும் மதிக்கறதே இல்ல ஓய்...

''சம்பாதிக்கற பணத்துல, திருச்சி வயர்லெஸ் ரோட்டுல, பல கோடி ரூபாய்ல சொகுசு ஹோட்டல் கட்டிருக்கார்... அங்க தான் அவரது வீடும் இருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய, பெஞ்ச் காலியானது.






      Dinamalar
      Follow us