/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆந்திர உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை உத்தரவு ரத்து
/
ஆந்திர உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை உத்தரவு ரத்து
PUBLISHED ON : பிப் 10, 2024 12:00 AM

புதுடில்லி: உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆந்திர உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து செய்துள்ளது.
கடந்த 2020ல் இரண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது. அப்போது இது தொடர்பான வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் கொலிஜியத்தின் இந்த முடிவை கண்டித்தும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்தும் ஒரு
உத்தரவு பிறப்பித்திருந்தார். நீதிபதி குமாரின் இந்த உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலிஜியத்துக்கு கண்டனம் தெரிவித்தும் முதல்வரை விமர்சித்தும் உத்தரவிட்ட ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.