தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/லத்துார் ஒன்றிய தலைவர் தேர்தல் வரும் 6ம் தேதி நடத்த அறிவிப்பு

லத்துார் ஒன்றிய தலைவர் தேர்தல் வரும் 6ம் தேதி நடத்த அறிவிப்பு

லத்துார் ஒன்றிய தலைவர் தேர்தல் வரும் 6ம் தேதி நடத்த அறிவிப்பு


PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பவுஞ்சூர்:லத்துார் ஒன்றியத்தில், 15 ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளனர். 2021ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., சார்பில் 10 கவுன்சிலர்கள், அ.தி.மு.க., சார்பில் ஐந்து கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.

ஒன்றிய தலைவர் பதவிக்கு, தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் பாபு சார்பாக, அவரது மனைவி சுபலட்சுமியும், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் ராமச்சந்திரனின் மனைவி சாந்தியும் போட்டியிட்டனர்.

அதில், ஆறு தி.மு.க., மற்றும் மூன்று அ.தி.மு.க., கவுன்சிலர்கள் என, 9 பேர் ஆதரவுடன் சுபலட்சுமி தேர்வானார். சாந்திக்கு நான்கு தி.மு.க., மற்றும் இரண்டு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் என, 6 பேர் வாக்களித்தனர்.

சில மாதங்களுக்கு முன், எட்டாவது வார்டு கவுன்சிலர் சுஜாதா, அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்து, வடக்கு ஒன்றிய செயலர் ராமச்சந்திரன் அணியில் சேர்ந்தார்.

ஒன்றிய குழுவை கலைக்க ராமச்சந்திரன் தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில், ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன்பின், கலெக்டரின் உத்தரவுப்படி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமையில், அக்.,13ம் தேதி லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு நடத்த சிறப்பு ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

அதில், தி.மு.க., சார்பில் எட்டு, அ.தி.மு.க., சார்பில் நான்கு என, 12 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஒன்றிய குழு தலைவர் சுபலட்சுமி, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் 13வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பர்வதம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதனால், நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பின், நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994ன் கீழ், லத்துார் ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் நீக்கப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அடுத்த தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், மார்ச் 6ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

காலை 10:30 மணிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலும், மதியம் 2:30 மணிக்கு துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலும், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் தலைமையில் நடக்க உள்ளதாக, அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us