/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம் துவக்கம்

PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM
ஓசூர் : ஓசூர், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில், ஐ.சி.டி., அகாடமி மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் ஆகியவை சார்பில், செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம் துவங்கி நடந்து வருகிறது. வரும், 11ம் தேதி வரை முகாம் நடக்க உள்ளது.
இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மாணவ, மாணவியர், 65 பேர் பயிற்சி மேற்கொள்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சிக்கு, அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறை தலைவி பாத்திமா வரவேற்றார்.
ஐ.சி.டி., அகாடமி மூத்த மேலாளர் பாலமுரளி, தகவல் தொழில்நுட்ப தொழில் மேலாளர் மற்றும் கல்விசார் செயல்பாட்டாளர் சந்துரு, திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆகியோர், மாணவ, மாணவியர் திறமைகளை எவ்வாறு வளர்த்து கொள்வது மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க தேவையான செயற்கை நுண்ணறிவு பயிற்சி குறித்து விளக்கி பேசினர். பேராசிரியை கோமா நன்றி கூறினார். முகாமில், 20 மணி நேர மென்திறன்கள் பயிற்சியும், 80 மணி நேர செயற்கை நுண்ணறிவு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.