/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் ஊழியரே கொள்ளைக்கு திட்டம்
/
ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் ஊழியரே கொள்ளைக்கு திட்டம்
ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் ஊழியரே கொள்ளைக்கு திட்டம்
ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் ஊழியரே கொள்ளைக்கு திட்டம்
PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM
கோடியூர்,:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையத்திற்கு, கடந்த, 3ம் தேதி மாலை, பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்கள், 36 லட்சம் ரூபாய் எடுத்து வந்தனர்.
ஊழியர் இருவர் பணப்பையுடன் ஏ.டி.எம்., மையத்திற்குள் நுழைய முயன்றபோது, திடீரென இரு வாலிபர்கள், பணப்பையை பறித்து கொண்டு, பைக்கில் தப்ப முயன்றனர். அப்போது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில், இருவரும் விழுந்தனர். அவர்களை ஊழியர் தண்டபாணி பிடிக்க முயன்றபோது, பணப்பையை விட்டு தப்பியோடினர்.
போலீசார் விசாரணையில், திருப்பத்துார் அடுத்த சின்ன உடையாமத்துாரைச் சேர்ந்த தண்டபாணி, 40, கருப்பனுார் சரண்ராஜ், 28, உள்ளிட்ட நால்வர் ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். சரண்ராஜ், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, தன் கூட்டாளிகள் இருவர் மூலம், பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து சரண்ராஜை போலீசார் கைது செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.