/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போதை பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
/
போதை பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM
திருப்போரூர், திருப்போரூரில், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.
திருப்போரூர், தண்டலம் ஸ்ரீ வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை தாளாளர் மலர்விழி துவக்கி வைத்தார்.
போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியபடி, பள்ளி மாணவ -- மாணவியர், ஓ.எம்.ஆர்., சாலையில் பேரணி சென்றனர். திருப்போரூர் பேருந்து நிலையத்தில், பேரணி நிறைவடைந்தது.
அங்கு, மதுப்பழக்கம், போதை பொருட்களுக்கு அடிமையாதல், தீய பழக்கங்களில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து, மாணவ - மாணவியர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.