/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பேபி கால்வாயா... பிளாஸ்டிக் கால்வாயா...? ரூ.28 லட்சத்தில் துார்வாரும் பணி என்னாச்சு

PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM
ஈரோடு, ஈரோட்டில் காலிங்கராயன் வாய்க்காலில் சாய சலவை, தோல் தொழிற்சாலை கழிவு, குடியிருப்புகளின் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் விதமாக, பேபி கால்வாய் கட்டப்பட்டது. இந்த பேபி கால்வாயை துார்வாரும் பணியை கடந்த மே, 22ம் தேதி அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
அப்போது, 28.25 லட்சம் ரூபாய் மதிப்பில், 20 கி.மீ., நீளத்துக்கு துார்வாரும் பணி மேற்கொள்ளப்படும். ஒரு மாதத்தில் பணி முடிக்கப்படும் என தெரிவித்திருந்தார். நான்கு மாதங்களாகியும் பணி தொடங்கவில்லை.
இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருள் தேங்கி, பிளாஸ்டிக் கால்வாயாக மாறியுள்ளது. இப்படி ஒரு கால்வாய் உலகத்தில் எங்காவது இருக்குமா?