/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
துணைவேந்தரை நியமிக்க கோரி பாரதியார் பல்கலை மாணவர்கள் போராட்டம்
/
துணைவேந்தரை நியமிக்க கோரி பாரதியார் பல்கலை மாணவர்கள் போராட்டம்
துணைவேந்தரை நியமிக்க கோரி பாரதியார் பல்கலை மாணவர்கள் போராட்டம்
துணைவேந்தரை நியமிக்க கோரி பாரதியார் பல்கலை மாணவர்கள் போராட்டம்
PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

கோவை:துணைவேந்தர் நியமிக்க வலியுறுத்தி பாரதியார் பல்கலை மாணவ -- மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பாரதியார் பல்கலையில், மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளதால், பல்வேறு குளறுபடி நிலவுகிறது.
ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தியதற்கு துணைவேந்தர் இல்லாததே காரணம் என்றும், துணைவேந்தரை நியமிக்க வேண்டுமென, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது:
நுழைவுத்தேர்வு எழுதி, அனைத்து தகுதிகளுடன் வரும் எங்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கு அதிக நிதி செலவாகிறது. பலமுறை பல்கலை நிர்வாகத்துக்கு கடிதம் கொடுத்தும் பதில் இல்லை. பட்ஜெட்டில், மாநில கல்லுாரிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அறிவிப்பு இல்லை.
நிலைமை இன்னும் மோசமாகும். எல்லாவற்றுக்கும் துணைவேந்தர் நியமிக்கப்படாததே காரணம். உடனடியாக துணை வேந்தரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.