தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அரசு ஊழியருக்கு இடையூறு எண்ணுார் நபர் மீது வழக்கு

அரசு ஊழியருக்கு இடையூறு எண்ணுார் நபர் மீது வழக்கு

அரசு ஊழியருக்கு இடையூறு எண்ணுார் நபர் மீது வழக்கு


PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எண்ணுார், எண்ணுார், தாமரை குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றம், மாற்று வீடுகள் வழங்குவது தொடர்பாக, திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் விஜய்பாபு, உதவி செயற்பொறியாளர்கள் நமச்சிவாயம், பாபு ஆகியோர் தலைமையில், நேற்று அதிகாரிகள் அங்கு முகாமிட்டிருந்தனர்.

வீடுகள் அகற்றுவது மற்றும் மாற்று வீடுகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சு நடந்தது. அப்போது, எண்ணுாரைச் சேர்ந்த ரியாஸ், 47, என்பவர், அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து, மாநகராட்சி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, உதவி பொறியாளர் கார்த்திக், எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us