PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: நோய் தாக்குதல் மற்றும் உற்பத்தி செலவு குறைவு என்பதால் கணிசமான விவசாயிகள் கோழி கொண்டை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.
கோழி கொண்டை பூக்களுக்கு ஆண்டு முழுவதும் தேவை உள்ளது. இது எல்லா தட்டவெப்ப சூழ்நிலையிலும் வளரக்கூடிய இயல்புடையது. தற்பொழுது கிலோ, 20 முதல், 80 ரூபாய் வரை விலை போகிறது.
திருமணம் மற்றும் கோவில் திருவிழா காலங்களில் இதற்கான தேவை அதிகரிக்கும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் களைகட்டும் என்பதால் மாலைகளுக்கான தேவை அதிகரிக்கும்.
இதனால் கோழி கொண்டை பூக்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

