PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

ஏலக்காய் டீக்கு ஆர்டர் தந்தபடியே, “அரசியல்வாதியோடு மோதலாமான்னு ஆதங்கப்படுறாங்க பா...” என்றபடி, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமாருக்கும் நடக்கிற மோதல் தான் ஊருக்கே தெரியுமே... சண்டிகர்லநடந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டுல, 'நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டியபிரிவினைவாத இயக்கம்'னுவருண்குமார் பேசிட்டாருப்பா...
“அதுக்கு, 'தேர்தல் கமிஷனில் பதிவு செய்த கட்சியை எப்படி பிரிவினைவாத இயக்கம்னுபேசலாம்'னு சீமானும்பதிலுக்கு கொந்தளிச்சாரு... இவங்க மோதலை பார்த்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் வருத்தப்படுறாங்க பா...
“அதாவது, 'தனிப்பட்ட முறையில் ஒரு அரசியல் கட்சி தலைவரை விமர்சிக்கிற வருண்குமாரை, அரசு கட்டுப்படுத்தணும்... சீமான் கட்சிக்கு எதிராக, அரசியல் ரீதியா ஆளுங்கட்சி என்ன வேணும்னாலும் பண்ணலாம்... அதுக்காக, ஐ.பி.எஸ்., அதிகாரி அத்துமீறி பேசுறதை கண்டுக்காம இருப்பது சரியில்ல... அதே நேரம், சீமானும், வருண்குமாரின் ஜாதி பத்தி எல்லாம் பேசியிருக்க கூடாது'ன்னு தங்களுக்குள்ள பேசிக்கிறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“என்கிட்டயும் ஐ.பி.எஸ்., தகவல் ஒண்ணு இருக்குல்லா...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்துல, சென்னை கமிஷனர் அருண் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை அரசியல் தலைவர்கள் கடுமையா விமர்சனம் பண்ணுதாங்கல்லா... இதுக்கு பதில் தர முடியாம, போலீஸ் அதிகாரிகள் மவுனமா குமுறிட்டுஇருக்காவ வே...
“சர்வீஸ்ல இருக்கும்போது, அரசியல்வாதிகளுக்கு விளக்கம் தந்தா வில்லங்கமாகிடும்னு யோசிக்காவ... இதனால,ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.,அதிகாரிகளை ஒருங்கிணைத்து ஒரு சங்கம் அமைக்க முயற்சிகள் நடக்கு... இந்த சங்கத்தை அமைச்சு, அதன் மூலமா அரசியல்வாதிகளுக்கு பதிலடி தரவும் திட்டமிட்டிருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.
“அக்காவும், தம்பியும்போட்டி போட்டு களத்துல இறங்கிட்டாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“யார் ஓய் அது...” எனகேட்டார், குப்பண்ணா.
“சமீபத்துல, துாத்துக்குடியில் நடந்த அரசு விழாக்கள்ல முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கிட்டாரே... இதுல, விழா மேடையில் துாத்துக்குடி மேயர் ஜெகனுக்கு இருக்கை போடாம, கீழே முதல் வரிசையில உட்கார வச்சிருந்தாங்க...
“மேயருக்கும், அவரது அக்காவான சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கும் ஏழாம் பொருத்தம்னுஎல்லாருக்கும் நல்லாவேதெரியும்... ஆனா, இதைநேர்லயே பார்த்து முதல்வர், 'அப்செட்' ஆகிட்டாருங்க... இதுக்காக, அப்புறமா அமைச்சரை கண்டிச்சிருக்காருங்க...
“நிகழ்ச்சி முடிஞ்சதும்கட்சி சீனியர்களிடம் பேசிய முதல்வர், 'துாத்துக்குடி முன்னாள் மாவட்ட செயலரான மறைந்த பெரியசாமியின் வாரிசுகள் ஜெகன், கீதா ரெண்டு பேரையும் நான் சமமாகவே பார்க்கிறேன்... கட்சி பணியில்அவங்க செயல்பாட்டைபார்த்துட்டு தான், 2026சட்டசபை தேர்தல்ல,'சீட்' ஒதுக்க போறேன்'னுசொல்லியிருக்காருங்க...
“இதை கேள்விப்பட்ட அக்காவும், தம்பியும், துாத்துக்குடி மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் கவரும் வகையில தீவிரமா களம் இறங்கிட்டாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

