sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மூன்று மாதமாக சம்பளம் இன்றி தவிக்கும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள்

/

மூன்று மாதமாக சம்பளம் இன்றி தவிக்கும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள்

மூன்று மாதமாக சம்பளம் இன்றி தவிக்கும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள்

மூன்று மாதமாக சம்பளம் இன்றி தவிக்கும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள்


PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி:தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் 450 வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் தவிக்கின்றனர்.

சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த பணியாளர்களாக வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 450 பேர் தமிழகம் முழுவதும் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு மார்ச் முதல் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

ஒப்பந்த பணியாளர்கள் கூறியதாவது:

மத்திய அரசின் போசன் அபியான் திட்டம் மற்றும் மாநில அரசின் நிதியில் 60:40 என்ற நிதி பகிர்வில் 2018ம் ஆண்டு முதல் ஒப்பந்த பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டோம். நான்கு ஆண்டுகளாக எங்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை வழங்க வேண்டிய 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஊரகம் மற்றும் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையப் பணிகளில் கலந்து கொள்ள நீண்ட துாரம் பயணிக்கும் எங்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படுவதில்லை.

ஆனால் பயணம் மேற்கொள்ள தொடர்ந்து உயர் அதிகாரிகளால் வலியுறுத்தப்படுகிறது. மேலும் 3 மாதமாக சம்பளம் வழங்காமல் உள்ளதால் அன்றாட தேவைக்கு கூட பணம் இன்றி குடும்பத்தின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி வழங்கியும் தமிழக அரசு உயரதிகாரிகளின் அலட்சியப்போக்கால் ஊதியம் வழங்கப்படவில்லை என்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட திட்ட அலுவலர் விசுபாரதி கூறியதாவது:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் கோரி சென்னையில் உள்ள தலைமையிடத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தாமதத்திற்கான காரணம் தெரியவில்லை. தொகை கிடைத்தவுடன் ஊதியம் வழங்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us