/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சொந்த ஊர் மக்களை மிரட்டிய சினிமா டைரக்டர்!
/
சொந்த ஊர் மக்களை மிரட்டிய சினிமா டைரக்டர்!
PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “ரணகளத்தைகண்டுக்காம, லண்டன் பறந்துட்டாருங்க...” என,பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யார் ஓய் அது...” எனகேட்டார், குப்பண்ணா.
“மதுரை மாநகர அ.தி.மு.க., செயலரா இருக்கிறவர், 'மாஜி' அமைச்சர் செல்லுார் ராஜு... சமீபத்துல, மதுரையில நடந்த களஆய்வு கூட்டத்துல, இவருக்கு எதிரா சிலர் கோஷம் போட, பெரிய ரகளையே நடந்துச்சுங்க...
“கூட்டம் முடிஞ்சதும்,எதையும் கண்டுக்காம ராஜு லண்டன் பறந்துட்டாருங்க... அவரது மூத்தமகள் அங்க இருக்காங்க...அதுவும் இல்லாம, ராஜுவுக்கு நெருக்கமானவங்க, அங்க புதுசாஹோட்டல் கட்டியிருக்காங்க... அதன் திறப்பு விழாவுல கலந்துக்க தான்போயிருக்காருங்க...
“நாளைக்கு ஜெ.,யின்நினைவு தினம் வருது...இதுக்காக, பழனிசாமி தலைமையில சென்னையில் அமைதி பேரணி நடக்க இருக்கு... 'இதுக்குராஜு வந்துடுவாரா அல்லதுலண்டன்லயே ஜெ., படத்துக்கு மாலை போடுவாரா'ன்னு மதுரைஅ.தி.மு.க.,வினர் பட்டிமன்றம் நடத்திட்டு இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“என்கிட்டயும் அ.தி.மு.க., தகவல் ஒண்ணு இருக்குது பா...”என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“திருச்சி மாநகர மாவட்டஅ.தி.மு.க., செயலர் சீனிவாசன்... தினகரன்கட்சியில் இருந்து வந்தஇவருக்கு பதவி குடுத்ததுல, ஏற்கனவே கட்சிக்குள்ள அதிருப்தி நிலவுது பா...
“தன் மாவட்டத்துல கட்சி பதவிகளை, தினகரன் அணியில் இருந்துவந்தவங்களுக்கே குடுத்திருக்காரு... தி.மு.க.,வுல பொறுப்பு கேட்டு கிடைக்காம, அ.தி.மு.க.,வுக்கு வந்த நசீமா பாரிக் என்பவருக்கு, மாநகர மகளிர் அணி செயலர் பதவி குடுத்திருக்காரு பா...
“கட்சி தலைவர்களிடம்பவ்யமா நடந்துக்கிற சீனிவாசன், மாவட்டத்துல சீனியர்களை துளியும் மதிக்க மாட்டேங்கிறார்... அமைச்சர் நேருவின் திருச்சி மேற்கு தொகுதியில், சமீபத்துல நடந்தவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை, இவர் கண்டுக்கவே இல்ல பா...
“நேத்து கட்சி துவங்கியவிஜய் கட்சியினர் கூட,முகாம்ல அக்கறையோடகலந்துக்கிட்டாங்க... இதனால, சமீபத்துல நடந்த கள ஆய்வு கூட்டத்துல முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுறப்ப, 'மாநகர கட்சியில் ஒற்றுமை இல்ல'ன்னு எச்சரிச்சுட்டுபோயிருக்காரு... இதனால, 'சீனிவாசன் பதவிக்கு வேட்டு வரலாம்'னு கட்சியினர் சொல்றாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
உடனே, “சினிமா டைரக்டர் கதையை கேளுங்க வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“டைரக்டர் மாரி செல்வராஜின் சொந்த ஊர், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருக்கிற புளியங்குளம்...சமீபத்துல இந்த ஊரை சேர்ந்த, 200 பேர் விஜய்கட்சியில சேர்ந்துட்டாவவே...
“இதுல, அவரது, வாழைபடத்தில் நடிச்ச ரெண்டு சிறுவர்கள் மற்றும் துணைநடிகர்கள் சிலர், விஜய் கட்சியின் துண்டு அணிந்தபடி இருந்த போட்டோ சமூக வலைதளங்கள்ல பரவுச்சு... உடனே, அவங்களுக்கு போன் போட்ட செல்வராஜ், 'ஏன்இப்படி பண்றீங்க'ன்னு கேட்டு கடுமையா திட்டியிருக்காரு வே...
“டென்ஷன் ஆன ஊர்மக்கள், 'நம்ம ஊர் கதையை, வாழை படமா எடுத்து பல கோடி ரூபாய்லாபம் பார்த்தீங்களே... கதையில வர்ற மாதிரி, நிஜமாவே விபத்து நடந்து, 19 பேர் இறந்து போனாங்களே... அவங்க குடும்பத்துக்கு ஏதாவது உதவிசெஞ்சீங்களா'ன்னு காட்டமா திருப்பி கேட்டிருக்காவ வே...
“பதில் தர முடியாதசெல்வராஜ், 'பட்'டுன்னுபோனை வச்சுட்டாரு... 'துணை முதல்வருடன்நெருக்கமா இருக்கிறஅவருக்கு யார் நெருக்கடிகுடுத்தாங்களோ'ன்னு ஊருக்குள்ள பேசிக்கிடுதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.