PUBLISHED ON : நவ 27, 2025 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
20 ஆண்டுகளாக
சாலை வசதி இல்லை
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட, செல்வராஜ் நகர், அப்துல்கலாம் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. வழித்தடம் மட்டுமே உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த வழித்தடத்தில், மழை நீர் தேங்கி, நடக்கவே முடியாத நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தோடு பயணிக்கின்றனர்.
குழந்தைகள், பெண்கள், முதியோர் கடும் அவதியை சந்தித்து வருவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்த வழித்தடத்தை சாலையாக புனரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- மு.லட்சுமி, ஊரப்பாக்கம்.

