தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்

 தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்

 தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்


PUBLISHED ON : ஜன 08, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியோரை கைது செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில், 2024ல் கொல்லப்பட்டார்.

தற்போது அவரின் மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார்.

அவரது கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:

எங்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலர் நரேஷ்பாபு, நேற்று முன்தினம், செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரிக்கு சென்று சென்னை திரும்பினார்.

கோலப்பன்சேரி சுங்கச் சாவடி அருகே உள்ள கடையில் டீ குடிக்கச் சென்றார். அப்போது அங்கு வந்த, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆனந்தன் மற்றும் அவரின் கூட்டாளிகள், 10க்கும் மேற்பட்டோர் நரேஷ்பாபுவை ஆபாசமாக பேசி உள்ளனர்.

அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, 50,000 ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.

காயமடைந்த நரேஷ்பாபு, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, வெள்ளவேடு காவல் நிலைய போலீசார், ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையறிந்த, ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள், நரேஷ்பாபுவுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், அவரின் உயிருக்கு பாதுகாப்பு கோரியும், வழக்கில் சிக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும், எங்கள் கட்சியின் பொதுச்செயலர் பொற்கொடி, ஆவடி கமிஷனர் அலுவலகதத்தில் புகார் அளித்தார்.

ஆனால், போலீசார் அவர்களை கைது செய்யவில்லை. ஆனந்தன் மற்றும் அவரின் கூட்டாளிகள், முன் கூட்டியே திட்டமிட்டு, நரேஷ்பாபுவை கொலை செய்ய வேண்டும் எனற திட்டத்துடன் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதனால், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us