/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மண்ணுக்கு இரையாகும் பறிமுதல் வாகனங்கள்
/
மண்ணுக்கு இரையாகும் பறிமுதல் வாகனங்கள்
PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

14.04.2025/கடம்பத்துார் /தி.நடராஜசிவா/ 7904308590/ கீ:855 / 2:00
***
திருமழிசை, ஏப். 15-
ஆவடி மாநகர போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சென்னை - பெங்களூர், திருமழிசை - ஊத்துக்கோட்டை, வண்டலுார் - நெமிலி புறவழிச்சாலை உட்பட நெடுஞ்சாலையில் விபத்து மற்றும் பல்வேறு வழக்குகளில் வாகனங்களை பறிமுதல் செய்து வருகி்னறனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் அரசு பள்ளி அருகே இணைப்பு சாலையோரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெயிலில் காயந்து,மழையில் நனைந்து துருப்பிடித்து புதருக்குள் மாயமாகி மண்ணுக்கு இரையாகி வீணாகி வருகிறது.
இந்த பறிமுதல் வாகனங்களை அகற்ற காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.