/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சுங்குவார்சத்திரம் சாலையை ஆக்கிரமித்துள்ள டூ - வீலர் பழுது பார்ப்பு கடையால் நெரிசல்

PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் சாலையை ஆக்கிரமித்துள்ள டூ - வீலர் பழுது பார்க்கும் கடையால் தினமும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வாலாஜாபாத் -- மப்பேடு, ஸ்ரீபெரும்புதுார் -- காஞ்சிபுரம் சாலைகள் இணையும் இடத்தில், சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு தேவைக்காக தினமும் சுங்குவார்சத்திரம் வந்து செல்கின்றனர்.
சுங்குவார்சத்திரம் சந்திப்பில் செயல்பட்டு வரும், கடைகளுக்கு வருவோர் தங்களின் இருசக்கர வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்துகின்றனர்.
குறிப்பாக, அப்பகுதியில் செயல்பட்டு வரும் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைக்கு வரும் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால், சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சுங்குவார்சத்திரம் சந்திப்பு திக்குமுக்காடி வருகிறது.
எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.