/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவு
/
சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவு
சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவு
சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவு
PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் சன்னிதி தெருவில், சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் வீடு, மனை, நிலம் வாங்க, விற்க மற்றும் திருமண பதிவு தொடர்பாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர், தங்களுடைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை, அலுவலகத்திற்கு முன் நிறுத்தி வந்தனர். தற்போது, அலுவலகத்திற்கு முன் கட்டட கழிவுகள், எம்.சாண்ட் ஆகியவை கொட்டப்பட்டு, சாலையோர கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனால், சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர், தங்களுடைய வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் நிலை உள்ளது. இதன் காரணமாக, சார் - பதிவாளர் அலுவலகம் வருவோர், வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.