sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது

/

 சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது

 சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது

 சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது


PUBLISHED ON : பிப் 24, 2026 01:13 AM

Google News

PUBLISHED ON : பிப் 24, 2026 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சர்வதேச சந்தையில் உற்பத்தி செலவு மற்றும் இறக்குமதி விலை அதிகரிப்பால், சமையல் எண்ணெய் ரகங்களின் விலை, லிட்டருக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, சேலம் மாவட்ட தாவர எண்ணெய் வியாபாரிகள் சங்கத்தலைவர் சந்திரதாசன் கூறியதாவது:

இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளின் சூரியகாந்தி எண்ணெய் தேவையை, ரஷ்யா, அர்ஜென்டினா, உக்ரைன் ஆகிய மூன்று நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றன.

இதில், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகவும், எண்ணெய் பிரித்தெடுக்கும் உற்பத்தி செலவு காரணமாகவும், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை, ஜன., மாதம் அதிகரித்து உள்ளது.

இதேபோல், பாமாயில் தேவையை, மலேஷியா, இந்தோனேஷியா நாடுகள் பூர்த்தி செய்கின்றன. இங்கும் உற்பத்தி செலவு அதிகரித்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது.

சேலத்தில், ஜன., மாதம் சில்லரை விற்பனையில் சூரியகாந்தி எண்ணெய் ஒரு லிட்டர், 160 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 10 ரூபாய் உயர்ந்து 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் பாமாயில், 130 ரூபாய்க்கு விற்றது; தற்போது, 140 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடலை எண்ணெய் ஒரு லிட்டர், 190க்கு விற்றது, தற்போது, 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நல்லெண்ணய் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர், 350 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய், 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது லிட்டருக்கு, 70 ரூபாய் குறைந்து, 380 ரூபாயாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us