/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கும்மிடி பி.டி.ஓ., அலுவலக நுழைவாயிலை தாழிட்டு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
/
கும்மிடி பி.டி.ஓ., அலுவலக நுழைவாயிலை தாழிட்டு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
கும்மிடி பி.டி.ஓ., அலுவலக நுழைவாயிலை தாழிட்டு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
கும்மிடி பி.டி.ஓ., அலுவலக நுழைவாயிலை தாழிட்டு கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM
கும்மிடிப்பூண்டி, டிச. 7--
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், மொத்தம், 26 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களில், 9 பேர் தி.மு.க., 6 பேர் அ.தி.மு.க., 7 பேர் சுயேட்சை, இருவர் பா.ம.க., தலா ஒருவர் காங்., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களில் அ.தி.மு.க.,வை, சேர்ந்த சிவகுமார் சேர்மனாகவும், தி.மு.க.,வை சேர்ந்த மாலதி துணை சேர்மனாகவும் பதவியில் உள்ளனர்.
தற்போதைய ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஐந்து ஆண்டு கால பதவி, இந்த மாதத்துடன் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட ஏராளமான மக்கள் நல திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்படாமல் இருக்கிறது.
ஐந்து ஆண்டு காலம் முடிய இருப்பதால், உடனடியாக டெண்டர் விட்டு அந்தந்த ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பணிகளை ஒதுக்க வேண்டும் என, பி.டி.ஓ.,விடம், கவுன்சிலர்கள் சிலர், நேற்று முறையிட்டனர்.
டெண்டர் எடுப்பதற்கான முன் வைப்பு தொகையை ஏற்றுக்கொள்ளும்படி பி.டி.ஓ., சந்திரசேகரிடம் தெரிவித்தனர்.
ஒன்றிய பொது நிதியில் போதிய நிதி இருப்பு இல்லாததால் முன் வைப்பு தொகை ஏற்றுக்கொள்ள முடியாது என, பி.டி.ஓ., தெரிவித்திருக்கிறார்.
இதனால், ஒன்றிய கவுன்சிலர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதால், கலந்து பேசி முடிவு எடுக்கலாம் என பி.டி.ஓ., தெரிவித்திருந்தார். முக்கிய அலுவல் பணியாக நேற்று மாலை பி.டி.ஓ., புறப்பட்டு சென்றார்.
முன் வைப்பு தொகை பெறாமல் பி.டி.ஓ., சென்றதால், கோபம் அடைந்த ஒன்றிய கவுன்சிலர்கள் சிலர் பி.டி.ஓ., அலுவலக நுழைவாயில் இரும்பு கேட்டை தாழிட்டு, அதன் அருகே அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால், பி.டி.ஓ., அலுவலக வேலையாக வந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சேர்மன் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர்களை சமாதானம் செய்து நுழைவாயில் கேட்டை திறக்க வைத்தார். அதன் பின் கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.