உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 04, 2026 05:36 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: நெல் அறுவடை காலம் துவங்கிய நிலையில் அறுவடை செய்த நெற்கதிர்களை ரோட்டில் உலர்த்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அறுவடை காலம் துவங்கியதால் விவசாயிகள் அறுவடை பணியை துவக்கியுள்ளனர். மிஷின் மூலம் அறுவடை செய்தாலும், கதிர்களில் சில நெல் மணிகள் பிரியாமல் இருக்கும். அதனை களத்தில் அடித்து பிரித்து எடுப்பர். சில கிராமங்களில் நெற்கதிர்களை அடிப்பதற்கான களம் இல்லாததால் ரோடு, பாலங்களில் நெற்கதிர்களை பரப்பி வருகின்றனர்.
நெற்கதிர்கரை ரோட்டில் உலர்த்துவதால் டூவீலர்கள், கார்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் நெற்கதிர்களை உலர்த்துவதற்கு இடவசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
