'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது மாணவர்களே, அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதீங்க...
'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது மாணவர்களே, அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதீங்க...
PUBLISHED ON : ஏப் 03, 2026 05:04 AM
புதுச்சேரி: 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி நாளை 4ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் புதுச்சேரியில் பிரமாண்டமாக நடக்கிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
இந்நிகழ்ச்சி, புதுச்சேரி 100 அடி ரோடு, மரப்பாலம் சிக்னல் அருகே உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டர் ஏ.சி., அரங்கில் நாளை (4ம் தேதி) காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.
நிகழ்ச்சியை கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவன பேராசிரியர் நரேஷ்குமார், கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன் பேராசிரியர் ஏ. சவுந்தரராஜன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் எஸ்.சவுந்தரராஜன், ஐ.பி.எஸ்., அதிகாரி கலியமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கின்றனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன.
மாணவர்களும் பெற்றோர்களும் நேரடியாக கல்வி நிறுவன பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.
கல்வி ஆலோசகர்கள், துறை நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் குறித்து சரியான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.
வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள், வளர்ச்சியடைந்து வரும் துறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளது. உயர்கல்வி சேர்க்கை நடைமுறை பற்றிய தெளிவும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும்.
நிகழ்ச்சி கருத்தரங்குகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. மதிப்பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்பு எது என்பதைத் தீர்மானிக்க இதுவே சரியான தருணம்.
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளின் கனவுப் பயணத்திற்கு இந்த கல்வி திருவிழா ஒரு நல்ல தொடக்கமாக அமையும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.
