sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தி.மு.க., ' பூத் ' நிர்வாகிகளுக்கு ' கவனிப்பு ' ஆரம்பம்!

தி.மு.க., ' பூத் ' நிர்வாகிகளுக்கு ' கவனிப்பு ' ஆரம்பம்!

தி.மு.க., ' பூத் ' நிர்வாகிகளுக்கு ' கவனிப்பு ' ஆரம்பம்!


PUBLISHED ON : ஜூலை 12, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணிட்டு, விளம்பரத்துல கோட்டை விட்டுட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துல இருந்து பிரசார பயணத்தை துவங்கியிருக்காரே... அவரது பிரசார மேடை, ரோடு ஷோ நடத்துற இடம், யார் யாருடன் உரையாடணும்னு எல்லா விஷயங்களையும், முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில அ.தி.மு.க.,வினர் பார்த்து பார்த்து செஞ்சிருந்தாங்க...

''ஆனா, பழனிசாமி பயணிக்கிற பாதை முழுக்க, தி.மு.க.,வினர் பெருசு பெருசா, சுவர் விளம்பரங்களை வரைஞ்சு வச்சிருந்தாங்க... அதுல, ஆட்சியின் சாதனைகளை குறிப்பிட்டிருந்தாங்க...

''பழனிசாமி பயணித்த பாதையில எங்கயும், அ.தி.மு.க., விளம்பரங்களையே பார்க்க முடியலைங்க... 'இதை வேலுமணி டீம் கவனிக்கலையா'ன்னு, அ.தி.மு.க.,வினரே சலிச்சுக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சொத்து குவிச்சவா பட்டியலை எடுத்துண்டு இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.

''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''ஆளுங்கட்சியில தான்... உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்கள், பேரூராட்சி, ஒன்றிய மற்றும் நகராட்சித் தலைவர்கள் பலர், நாலு வருஷமா நிறைய முறைகேடுகள்ல ஈடுபட்டு, சொத்துக்களை சேர்த்திருக்கா ஓய்...

''இது சம்பந்தமா, 'பொதுமக்களுடன் நேரடி தொடர்புல இருக்கற இவாளால தான், நிறைய இடங்கள்ல ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர்'னு மேலிடத்துக்கு உளவுத்துறை அறிக்கை குடுத்திருக்கு... இதனால, யார் யார் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கா... கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துற விதமா செயல்பட்டவா யார்னு கணக்கெடுத்து, அவா மேல நடவடிக்கை எடுக்க மேலிடம் திட்டமிட்டிருக்கு...

''அவாளது சொத்து பட்டியலை, தமிழகம் முழுக்க உளவுத்துறையினர் ரகசியமா சேகரிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''இப்பவே, 'கவனிப்பை'ஆரம்பிச்சுட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''வாக்காளர்களுக்கா வே...'' என கேட்டார், அண்ணாச்சி.

''அதை, தேர்தல் நெருங்கும்போது பண்ணுவாங்க... தேர்தல் வேலையில இறங்கிட்ட தி.மு.க.,வினர், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயர்ல வீடு வீடா பிரசாரம் பண்றாங்களே... இதுக்காக, 'பூத்' வாரியா நிர்வாகிகளை நியமிச்சிருக்காங்க பா...

''ஒவ்வொரு, 'பூத்' கமிட்டி நிர்வாகிகளுக்கும் தலா, 5,000 ரூபாயை முதல் கட்டமா வழங்கியிருக்காங்க... சில பகுதிகள்ல இதை விட கூடுதலான தொகையும் குடுத்திருக்காங்க பா...

''இது போக, சமூக வலைதளங்கள்ல பண்ற பிரசார பணிகளுக்காக,கட்சியின் ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கு, போன்லயே பெரிய சைஸ்ல இருக்குமே... 'டேப்லெட், அதுவும், காஸ்ட்லியான மொபைல் போன்களையும் வாங்கி குடுத்திருக்காங்க... இந்த செலவுகளை எல்லாம், 'பசை'யான துறைகளை கவனிக்கிற சில அமைச்சர்கள் தான் செஞ்சிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''அது சரி... சின்ன மீனை போட்டு தானே பெரிய மீனை பிடிக்க முடியும் வே...'' என, சிரித்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us