/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் மக்களுக்கான கூட்டமில்லையென அ.தி.மு.க., வெளிநடப்பு
/
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் மக்களுக்கான கூட்டமில்லையென அ.தி.மு.க., வெளிநடப்பு
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் மக்களுக்கான கூட்டமில்லையென அ.தி.மு.க., வெளிநடப்பு
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் மக்களுக்கான கூட்டமில்லையென அ.தி.மு.க., வெளிநடப்பு
PUBLISHED ON : அக் 22, 2024 12:00 AM

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று காலை நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
காமராஜ், தி.மு.க., 4வது மண்டல தலைவர்: தாம்பரத்தில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு அளிக்கும் பணியை, ஒப்பந்ததாரர் சரியாக செய்வதில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
அதனால், அனகாபுத்துாரைபோல் தாம்பரத்திலும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு ஒப்பந்ததாரர் வாயிலாக இணைப்புகளை கொடுத்து, திட்டத்தை முடிக்க வேண்டும்.
மாநகராட்சியில், பசுமை உரக்கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அவை முறையாக செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காரணம், தாம்பரம் கன்னடப்பாளையத்திற்கு தினமும் பல டன் குப்பை வருகிறது.
பசுமை உரக்கிடங்குகள் முறையாக செயல்பட்டால், இவ்வளவு குப்பை வர வாய்ப்பில்லை.
சங்கர், அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்: தாம்பரம் மாநகராட்சி என்பது, 70 வார்டுகளுக்கும் பொதுவானது. ஆனால், அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில், எந்த பணியும் நடக்கவில்லை.
மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக மனு கொடுத்தாலும், அப்பணியை செய்வதில்லை. இந்த கூட்டத்தை பார்க்கும் போது, மக்களுக்கான கூட்டம் போல் இல்லை. தீபாவளி பட்ஜெட் கூட்டம் போல் உள்ளது. இந்த கூட்டத்தில் இருந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
தாமோதரன், தி.மு.க.: தாம்பரம் - வேளச்சேரி சாலையில், சேலையூர் காவல் நிலையம் முதல் கேம்ப் சாலை சந்திப்பு வரை, மாதத்தில் 30 நாட்களும், சாலையில் பாதாள சாக்கடை ஓடுகிறது.
ஒரு இயந்திர நுழைவு வாயிலை அடைத்தால், அடுத்த நுழைவு வாயிலில் கழிவுநீர் கசிகிறது. இதனால், மக்கள் தினமும் பாதிப்படைகின்றனர். பல முறை புகார் தெரிவித்தும், இதை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவில்லை.
யாக்கூப், ம.ம.க.: கடப்பேரி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் மூன்று கால்வாய்கள் சுத்தம் செய்யப்படவில்லை.
இந்த ஏரியில், ஒட்டுமொத்த மழைநீரும், மருத்துவ கழிவுகளும் கலந்து, நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. கழிவுநீர் கலந்த தண்ணீரை தான் பயன்படுத்துகிறோம்.
கால்வாயை சுத்தம் செய்யாததால், இந்த மழையில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. மேயருக்கு, அதிகாரிகள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர்.
கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளதை நிரூபித்தால், இந்த நிமிடமே எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.