/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நிலம் விற்க முன்பணம் ரூ.43 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்கு தி.மு.க., நிர்வாகி உட்பட 2 பேர் கைது

PUBLISHED ON : செப் 22, 2024 12:00 AM

தேனி:நீதிமன்ற உத்தரவை மறைத்து, 1.20 ஏக்கர் நிலத்தை விற்க முன்பணமாக 43 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு மாவட்ட தி.மு.க., சிறுபான்மையின பிரிவு துணை அமைப்பாளர் அப்பாஸ் கான், 55, மற்றும் ரமேஷ்பாபு, 50, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தென்கரை சிவசாமி மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. சிவசாமி தன் மனைவி ராஜேஸ்வரியின் சகோதரர் மகன் ரமேஷ்பாபு பெயரில் 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை உயில் எழுதி வைத்தார்.
மேலும் அந்த நிலத்தை ராஜேஸ்வரியும் ரமேஷ் பாபுவும் சரிசமமாக பிரித்துக் கொள்ளுமாறு உயிலில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், ரமேஷ்பாபு வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள அந்த நிலத்தை ராஜேஸ்வரிக்கு தெரியாமல் 2012ம் ஆண்டு ஜூலை 6ல் தாயார் பாண்டியம்மாளுக்கு தானமாக எழுதி வைத்தார்.
அன்றே பாண்டியம்மாளுடன் இணைந்து உறவினர் முத்துவேலுக்கு அந்தச் சொத்துக்கான 'பவர் ஆப் அத்தாரிட்டி' எழுதிக் கொடுத்தார்.
அதன்பின் முத்துவேல், பெரியகுளம் அப்பாஸ் கான், அகமது பஷீர், அப்துல்ராஜ், அமீர் ஆகிய 4 பேருக்கு கிரையம் செய்து கொடுத்தார்.
ஆனால், இந்த நிலத்தின் பட்டா ராஜேஸ்வரி பெயரில் இருப்பதாக நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மறைத்து, ரமேஷ்பாபு உட்பட 5 பேரும் இணைந்து தேனி அருகே பின்னத்தேவன்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமியிடம் 43 லட்சம் ரூபாய் முன்பணமாக வாங்கினர். ஆனால் ஆண்டிச்சாமிக்கு பத்திரம் முடிக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.
ஆண்டிச்சாமி தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று பெரியகுளம் தி.மு.க., நிர்வாகி அப்பாஸ்கான், ரமேஷ்பாபு ஆகிய இருவரை கைது செய்தனர்.