/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்க தி.மு.க.,வினர் எதிர்ப்பு!
/
ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்க தி.மு.க.,வினர் எதிர்ப்பு!
ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்க தி.மு.க.,வினர் எதிர்ப்பு!
ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்க தி.மு.க.,வினர் எதிர்ப்பு!
PUBLISHED ON : பிப் 26, 2026 03:08 AM

''அ திகாரிகளுக்கு முன்னுதாரணமா இருக்காரு பா...'' என்றபடியே, ஏலக்காய் டீக்கு ஆர்டர் தந்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மாவட்ட கலெக்டர்கள், வழக்கமா, தங்களது அலுவலகங்கள்ல மட்டும் தான் மக்களை சந்திச்சு, குறைகள் கேட்பாங்க... அவங்க வீட்டுக்கு யார் போனாலும் பார்க்க மாட்டாங்க...
''யாராவது தேடி போனாலும், வாசல்ல இருக்கிற பாதுகாப்பு போலீசார், உள்ளயே விட மாட்டாங்க... ஆனா, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், தன் வீடு தேடி வர்ற பொதுமக்களை பார்த்து, குறைகளை கேட்கிறாரு பா...
''சாயந்தரம் அலுவலகம் முடிஞ்சு வீட்டுக்கு வர்ற கலெக்டர், ராத்திரி வரைக்கும், தன் வீட்டுக்கு வர்ற மக்களை பார்த்து, அவங்களது பிரச்னைகளை காது கொடுத்து கேட்டு, நடவடிக்கை எடுக்கிறாரு... இதனால, அவரது வீட்டு வாசல்ல எப்பவும் மக்கள் கூட்டம் அலைமோதிட்டு இருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.
''பணி நியமன நடைமுறையை மாத்திட்டா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக அரசு மருத்துவமனைகள்ல, டீனுக்கு அடுத்து மருத்துவ கண்காணிப்பாளர் எனும் எம்.எஸ்., நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் உதவி நிலைய மருத்துவ அலுவலர், அதாவது, ஆர்.எம்.ஓ., மற்றும் ஏ.ஆர்.எம்.ஓ.,ன்னு பதவிகள் இருக்கோல்லியோ... இதுல, எம்.எஸ்., மற்றும் ஆர்.எம்.ஓ., பணியிடங்களை, 'சீனியாரிட்டி' அடிப்படையில் நிரப்புவா ஓய்...
''அதாவது, மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்களா இருக்கறவாளை, 'கவுன்சிலிங் பேனல்' மூலமா இந்த பணியிடத்துக்கு நியமிப்பா... சமீபத்தில், 'துாங்கா நகர்' அரசு மருத்துவமனை எம்.எஸ்., முக்கியமான துறைக்கு தலைவரா போயிட்டார்... அந்த இடத்துக்கு ஜூனியர் டாக்டர் ஒருத்தரை நியமிச்சிருக்கா ஓய்...
''இதனால, 'கடந்த, 15 வருஷமா இப்படி நடந்ததே இல்ல... கவுன்சிலிங் பேனல் எல்லாம் எதுக்கு இருக்கு'ன்னு சீனியர் டாக்டர்கள் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கார்த்திகேயன், இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த பெரியசாமி அண்ணாச்சியே, ''கூட்டணி கட்சிக்கு குடுக்க எதிர்ப்பு கிளம்பியிருக்கு வே...'' என்றார்.
''எந்த தொகுதியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தொகுதியில் கடந்த, 30 வருஷங்களா தி.மு.க., போட்டியிடவே இல்ல... கூட்டணி கட்சிகளான காங்., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு ஒதுக்கிடும்...
''அதாவது, '2021 சட்டசபை தேர்தலில், இந்த தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதால, இங்க தென்காசி மாவட்ட அ.தி.மு.க., செயலரான கிருஷ்ணமுரளி சுலபமா ஜெயிச்சிட்டார்... அதனால, இந்த முறை நாமே களமிறங்கி, அவரை தோற்கடிக்கணும்'னு தி.மு.க.,வினர் சபதம் போட்டிருந்தாவ வே...
''ஆனா, இந்த தொகுதியை ம.தி.மு.க., கேட்டிருக்காம்... அந்த கட்சியின் துணை பொதுச்செயலர் ராஜேந்திரனை அங்க நிறுத்தவும் திட்டமிட்டிருக்காவ வே...
''கடையநல்லுாருக்கு பக்கத்து தொகுதியான வாசுதேவநல்லுார், இப்ப ம.தி.மு.க., வசம் தான் இருக்கு... இதனால, 'மறுபடியும் அதையே அவங்களுக்கு குடுத்துட்டு, நாமே கடையநல்லுார்ல களமிறங்கணும்'னு தலைமையிடம் தி.மு.க.,வினர் வலியுறுத்திட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பி னர்.

