sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

தொழில் ' பார்ட்னர் ' களான திராவிட கட்சி புள்ளிகள்!

/

தொழில் ' பார்ட்னர் ' களான திராவிட கட்சி புள்ளிகள்!

தொழில் ' பார்ட்னர் ' களான திராவிட கட்சி புள்ளிகள்!

தொழில் ' பார்ட்னர் ' களான திராவிட கட்சி புள்ளிகள்!

1


PUBLISHED ON : நவ 29, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 29, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழைக்கு இதமாக, நாயர் தந்த சுக்கு காபியைருசித்தபடியே, ''ஆளுங்கட்சியினர் பின்னணி இருக்கோன்னு சந்தேகப்படுறாங்க பா...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''தேர்தல் கமிஷன் சார்புல, சமீபத்துல வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தினாங்கல்ல... இதுல, பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றத்துக்கு பலரும் விண்ணப்பங்கள் குடுத்தாங்க பா...

''மதுரை கிழக்கு தொகுதியில் நடந்த முகாம்கள்ல, மாவட்ட நிர்வாகம் சார்பில், பி.எல்.ஓ.,க்கள் எனப்படும் பூத் லெவல் ஆபீசர்களிடம் வாக்காளர்பட்டியலையே குடுத்துட்டாங்க... அதோட, 'கடந்த தேர்தல்ல ஓட்டுபோடாதவங்க பெயர், போன் நம்பர், முகவரிஉள்ளிட்ட விபரங்களைகுறிச்சு குடுங்க'ன்னும் கேட்டிருக்காங்க பா...

''இதன்படி, பி.எல்.ஓ.,க்களும் எழுதிகுடுத்துட்டாங்க... ஆனா,மற்ற தொகுதிகள், மாவட்டங்கள்னு எங்கயும்இந்த மாதிரி ஓட்டளிக்காதவங்க விபரங்களை கேட்கலையாம்... இங்கமட்டும் கேட்டதால, 'ஆளுங்கட்சியினர் ஏதாவது தில்லுமுல்லு பண்ண இப்படி விபரம்சேகரிக்கிறாங்களோ'ன்னு பி.எல்.ஓ.,க்கள் சந்தேகப்படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கவுன்ட் டவுனை எண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''யாருக்கு வே...'' என கேட்டார், அண்ணாச்சி.

''ஈரோடு மாவட்டம்,அம்மாபேட்டை ஒன்றியஅலுவலகத்தின் முக்கியபதவியில், தி.மு.க., பெண்புள்ளி இருக்காங்க... இவங்க, அ.தி.மு.க., சார்புல தான் ஜெயிச்சாங்க... அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கருப்பணன் உடன் ஏற்பட்ட மோதலால, தன்கணவரோட தி.மு.க.,வுக்குதாவிட்டாங்க ஓய்...

''ஒன்றிய நிர்வாகத்துல,பெண் புள்ளியின் கணவர் வச்சது தான் சட்டம்... கவுன்சிலர்கள்,அதிகாரிகள்னு யாரையும்மதிக்கறது இல்ல ஓய்... 'நான் சொல்றவாளுக்கு தான், 'டெண்டர்' பணிகளை ஒதுக்கணும்'னுஓவரா ஆட்டம்போடுறார்...

''இன்னும் ஒரு மாசத்துல, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வர்றதால, ஒன்றிய அதிகாரிகள் எல்லாம் உற்சாகத்துலநாட்களை எண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார்,குப்பண்ணா.

''எலியும், பூனையுமாஇருந்தவங்க, 'பார்ட்னர்'களா மாறிட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியேதொடர்ந்தார்...

''துாத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரான, 'மாஜி' அமைச்சர் சண்முகநாதனுக்கு சொந்தமா, 'கோல்டன் மைன்ஸ்' என்ற கல் குவாரி கட்டாலங்குளம் பகுதியில் இருக்கு... இவரது மகன் ராஜா பெயர்ல இருக்கிறஇந்த குவாரி, மூணு வருஷமா மூடியே கிடந்துச்சுங்க...

''இப்ப, மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனின் மகன் மகேஸ்வரன், இந்த குவாரியை குத்தகைக்கு எடுத்து, 'சிவா மெட்டல்ஸ்' என்ற பெயர்ல நடத்துறாருங்க... சண்முகநாதனும்,அனிதாவும் அ.தி.மு.க.,வுல இருந்தப்ப, எலியும்,பூனையுமா தான் இருப்பாங்க...

''இப்ப, எதிரெதிர் கட்சிகள்ல இருக்கிற சூழல்ல, தொழில் பார்ட்னர்களா மாறிட்டாங்க... இதை, அவங்களது எதிர் கோஷ்டியை சேர்ந்தவங்க, ஆதாரங்களுடன் அவங்கவங்க கட்சி தலைமைக்கு புகாரா அனுப்பிட்டு இருக்காங்க...'' என முடித்தார்,அந்தோணிசாமி.

பெரியவர்கள் கிளம்ப,பெஞ்ச் அமைதியானது.






      Dinamalar
      Follow us