/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பயணியின் 1 கிலோ வெள்ளி 'லபக்'கிய ஓட்டுநர், ஆசாரி கைது
/
பயணியின் 1 கிலோ வெள்ளி 'லபக்'கிய ஓட்டுநர், ஆசாரி கைது
பயணியின் 1 கிலோ வெள்ளி 'லபக்'கிய ஓட்டுநர், ஆசாரி கைது
பயணியின் 1 கிலோ வெள்ளி 'லபக்'கிய ஓட்டுநர், ஆசாரி கைது
PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM
சென்னை, திருவல்லிக்கேணி, பெரிய தெருவைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ், 78. இவரது பேத்தியின் திருமணம், திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ ஜெயின் ஸ்வேதம்பர் தேராபந்த் பவனில் கடந்த, 16ம் தேதி நடந்தது.
அன்று மதியம் மண்டபத்தை காலி செய்து, ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பையில் வைத்திருந்த 1 கிலோ வெள்ளி பூஜைப் பொருட்களை, ஆட்டோவில் தவறவிட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின்படி ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரித்தனர். இதில் ஆட்டோவில் தவறவிட்ட வெள்ளி பொருட்களை, நங்கநல்லுாரைச் சேர்ந்த ஓட்டுநர் ஸ்ரீராம், 46, எடுத்து, அதே பகுதி ஆசாரி சுப்ரமணி, 47, என்பவரிடம் கொடுத்து உருக்கியதும், அதற்காக 74,000 ரூபாய் வாங்கியதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார், ஓட்டுநர் ஸ்ரீராம், ஆசாரி சுப்ரமணி ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.