தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்


PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்தணி:திருத்தணி அடுத்த மேல்திருத்தணியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம் 15ம் தேதி நடப்பாண்டிற்கான தீமிதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்து வந்தது.

நேற்று காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

மேல்திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர்.

இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை, மேல்திருத்தணி மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us