/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஜவ்வாக இழுக்கும் 'டிஜிட்டல் சர்வே' பணிகள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பு
/
ஜவ்வாக இழுக்கும் 'டிஜிட்டல் சர்வே' பணிகள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பு
ஜவ்வாக இழுக்கும் 'டிஜிட்டல் சர்வே' பணிகள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பு
ஜவ்வாக இழுக்கும் 'டிஜிட்டல் சர்வே' பணிகள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பு
PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM
விருதுநகர்:தமிழகத்தில் 2024 நவ.,ல் துவங்கிய டிஜிட்டல் சர்வே பணிகள் பல மாவட்டங்களில் இன்னும் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே உள்ளது. கணக்கெடுக்கும் பணிகளில் துல்லியத்தை உறுதி செய்ய வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 17 ஆயிரத்து 662 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் 2024 நவ. 9 முதல் விளைநிலங்களை டிஜிட்டல் சர்வே செய்யும் பணி துவங்கியது. விளைநிலங்களின் விபரம், பயிர் செய்த படம் ஆகியவற்றை கணினியில் பதிவேற்றி அரசின் திட்டங்களுக்காக இந்த டிஜிட்டல் பயிர் சர்வே நடத்தப்படுகிறது. இதில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், பொறியியல் துறைகளின் தொழில்நுட்பம் சார்ந்த, சாராத அலுவலர்கள் தலைமையில் மதுரை, தேனி வேளாண் கல்லுாரி மாணவர்கள், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று கள ஆய்வு செய்து வந்தனர்.
இதில் மாணவர்கள் காயமடைவது உள்ளிட்ட சிரமங்களை சந்தித்தனர். தற்போது அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அலைபேசி செயலி மூலம் விளைநிலங்களில் ஜி.பி.எஸ்., ஐ வைத்து இதை செயல்படுத்துகின்றனர். இதனால் நில அமைவிடம், அதன் புகைப்படம் ஆகியவை துல்லியமாக பதிவேற்றப்படுகின்றன.
திட்டங்களை செயல்படுவதிலும், தேவையான புதிய முன்னெடுப்புகளை எடுக்கவும் இது உதவும் என வேளாண்துறையினர் தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட நில புலன்களில் உள்ள விவசாயிகள் என்ன பயிர் செய்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
வழக்கமாக சர்வே பணி என்பது வருவாய்த்துறையினுடையது. ஆனால் பணி அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் வி.ஏ.ஓ.,க்கள் வருவாய்த்துறையிடம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க கோரினர். அதை மறுத்ததால் பணிகளை செய்யவில்லை.
பாதி மாவட்டங்களில் டிஜிட்டல் சர்வே முடிந்து விட்ட நிலையில் இன்னும் பல மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. சர்வேயில் துல்லியம் இல்லை என விவசாயிகளில் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். பதிவேற்றியவற்றின் துல்லியத்தை வருவாய்த்துறையினரை வைத்து சரிபார்க்க வேண்டும், அதை செய்தால் தான் டிஜிட்டல் சர்வே பணி சரியாக இருக்கும் என்கின்றனர்.