/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசூர் ஏரியில் மண் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்

PUBLISHED ON : ஜூலை 15, 2025 12:00 AM

பொன்னேரி, அரசூர் ஏரியில் மண் குவாரி அமைக்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த அரசூர் கிராமத்தில், நீர்வள துறையின் கட்டுப்பாட்டில், 240 ஏக்கரில் பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரில் அரசூர், சிற்றரசூர், காட்டாவூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 650 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரியில், பல்வேறு பணிகளுக்காக மண் குவாரி அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கும் என்பதால், ஏரியில் மண் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த 2014ல், ஏரியில் குவாரி என்ற பெயரில், 20 அடி ஆழத்திற்கு மண்ணுடன் சேர்த்து மணலையும் அள்ளினர். மண் லாரிகளால் கிராமங்களில் உள்ள சாலைகளும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் மண் அள்ள முயற்சிகள் நடந்தன. விவசாயிகளின் எதிர்ப்பால் நின்று போனது. தற்போது, மீண்டும் மண் குவாரி அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இது, விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மண் குவாரி அமைத்தால், ஏரியின் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது. சாலைகள் சேதமடைந்து, கிராம மக்களும் இன்னலுக்கு ஆளாவர்.எனவே, மாவட்ட நிர்வாகம், அரசூர் ஏரியில் மண் குவாரி அமைக்க அனுமதி தரக்கூடாது. அனுமதித்தால், போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.