PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

திருமங்கலம்திருமங்கலம், பாடிகுப்பம் சுடுகாடு அருகில் 10 பேர், மது அருந்தி கொண்டிருந்தனர். அங்கு சென்ற, திருமங்கலம் போலீஸ்காரர் வசந்தராஜா, அவர்களிடம் விசாரித்தார்.
அப்போது, மது போதையில் இருந்த அவர்கள், வசந்தராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
அப்போது, போலீஸ் ரோந்து வாகனம் அவ்வழியாக வந்ததால், அனைவரும் தப்பி ஓடினர். திருமங்கலம் போலீசார் விசாரித்து, அத்திப்பட்டு, ஐ.சி.எப்., காலனியைச் சேர்ந்த யுவராஜ் 20, நந்தகுமார், 22, பாடிகுப்பம் சுதீஷ், 23, 'டிங்கு' பாலாஜி, 28, அரும்பாக்கம் தாமஸ், 28, ஆகிய ஐவரை, நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் மூவர் பழைய குற்றவாளிகள் என்பதும், யுவராஜ் மீது எட்டு வழக்குகளும், சுதீஷ் 5 வழக்குகளும், பாலாஜி மீது 15 வழக்குகளும், நந்தகுமார் மீது ஒன்பது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணை பின், ஐவரையும் நேற்று சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து பேரை தேடுகின்றனர்.