தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சத்ரு சம்ஹார யாகம் நடத்திய தி.மு.க., 'மாஜி' அமைச்சர்!

 சத்ரு சம்ஹார யாகம் நடத்திய தி.மு.க., 'மாஜி' அமைச்சர்!

 சத்ரு சம்ஹார யாகம் நடத்திய தி.மு.க., 'மாஜி' அமைச்சர்!


PUBLISHED ON : பிப் 04, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2026 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அ ரசு மீது கடும் கோபத்துல இருக்காங்க பா...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''நிறைய பேர் கோபத்துல இருக்காவ... நீரு யாரை சொல்லுதீரு...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ், 35,000 ரேஷன் கடைகள் இருக்கு... இந்த கடைகளுக்கான பொருட்களை, உணவு துறை கொள்முதல் செஞ்சு, ரேஷன் கடைகளுக்கு அனுப்புது பா...

''அதே நேரம், ரேஷன் கடைகளில் கூட்டுறவு, உணவு, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அந்தந்த உள்ளாட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள்னு பலரும் அடிக்கடி ஆய்வுக்கு போறாங்க... அப்ப, ஊழியர்களிடம், 500 முதல் 1,000 ரூபாய்னு லஞ்சம் வாங்கிட்டு போயிடுறாங்க பா...

''இதனால, 'பொது வினியோக திட்டத்தை தனி துறையாக்கி, ஒரே துறையின் கீழ் நிர்வாகத்தை கொண்டு வரணும்'னு ரேஷன் ஊழியர்கள் பல வருஷங்களா கோரிக்கை வச்சுட்டு இருக்காங்க... 'நாங்க ஆட்சிக்கு வந்தா, இதை நிறைவேற்றுவோம்'னு 2021ல் தி.மு.க.,வினர் அறிவிச்சாங்க பா...

''வழக்கம் போல இந்த வாக்குறுதியையும் கிடப்புல போட்டுட்டாங்க... இதனால, ஆளுங்கட்சி மீது ரேஷன் ஊழியர்கள் எல்லாம் கடும் அதிருப்தியில இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கமிஷனை நேர்ல குடுத்துட்டு வந்துட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டம் மூலம், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள்ல இருக்கிற சாலைகளை மேம்படுத்தும் பணிகள், 1,000 கோடி ரூபாய் செலவுல நடக்க இருக்கு... நகராட்சி நிர்வாகத்துறை மூலமா தான் இந்த பணிகளை செய்யப் போறாங்க...

''இதுக்கு முன்னாடி, அந்தந்த உள்ளாட்சிகளில் நடக்கிற பணிகளுக்கான கமிஷன்களை, துறையின் மேலிடத்தில் சேர்க்கும் பணியை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளே பார்த்துக்கிட்டாங்க... ஆனா, இந்த முறை, 1,000 கோடி ரூபாய் பணிகளுக்குரிய கமிஷனை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்ல இருக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சென்னைக்கு எடுத்துட்டு போய், துறை மேலிடத்திடம் குடுத்துட்டு வந்திருக்காங்க... இது, தேர்தல் செலவுக்குன்னும் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எதிரிகளை வீழ்த்த யாகம் பண்ணியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''யாரு வே அது...'' என கேட்டார், அண்ணாச்சி.

''தி.மு.க., துணை பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி, பகுத்தறிவாளர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்னு தன்னை காட்டிப்பார்... ஆனா, தேர்தல் வெற்றிக்காக, தற்போது, ஆன்மிக வழியில் இறங்கிட்டாராம் ஓய்...

''கிட்டத்தட்ட, 40 வருஷமா விழுப்புரத்தில் குடியிருந்தவர், இப்ப தான், எம்.எல்.ஏ.,வா இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார்ல மூணு மாடியில் பங்களா கட்டி குடிபோயிட்டார்... நல்ல நேரம் பார்த்து பால் காய்ச்சியிருக்கார் ஓய்...

''அதோட, 'வர்ற சட்டசபை தேர்தல்ல ஜெயிச்சு மறுபடியும் அமைச்சராகணும்... தன் மீதான வழக்குகள்ல இருந்து விடுபடணும், எதிரிகளை வீழ்த்தணும், நோய், நொடி இல்லாம வாழணும்'கற வேண்டுதல்களுடன், புது வீட்டில் தன் குடும்பத்தினருடன் அமர்ந்து, சத்ரு சம்ஹார யாகத்தையும் நடத்தியிருக்கார்...

''அன்னைக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்னு யாரும், தன்னை பார்க்க வீட்டு பக்கம் வந்துடப்படாதுன்னு முன்கூட்டியே கண்டிப்பா உத்தரவும் போட்டுட்டார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us