/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நங்கநல்லுாரில் கருடசேவை மகோற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
/
நங்கநல்லுாரில் கருடசேவை மகோற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
நங்கநல்லுாரில் கருடசேவை மகோற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
நங்கநல்லுாரில் கருடசேவை மகோற்சவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

சென்னை, பனிரெண்டு ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீ பஞ்ச கருட சேவா சமிதி சார்பில் கருட சேவை மகோற்சவம் விமர்சையாக நடத்தப்பட்டது. நங்கநல்லுாரை சுற்றியுள்ள ஆறு பெருமாள் கோவில்களின் உற்சவர் கருட வாகனத்தில் தேசிகருக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை, நங்கநல்லுார், எம்.எம்.டி.சி., காலனியில் ஸ்ரீ பஞ்ச கருட சேவா சமதி,2005ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதன் சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கருட சேவை மகோற்சவத்தை மிகவும் விமர்சையாக நடத்துவது வழக்கம்.
இவ்விழாவில் நங்கநல்லுாரை சுற்றியுள்ள பெருமாள் கோவில்களின் உற்சவர்கள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கோவில்களில் பிரம்மோற்சவம் உள்ளிட்ட சில காரணங்களால் கருட சேவை நடத்த முடியாமல் போனது.
இந்நிலையில், 12 ஆண்டிற்கு பின் நேற்று முன்தினம் கருட சேவை உற்சவம் நங்கநல்லுார், ஹிந்து காலனியில் உள்ள செல்லம்மாள் வித்யாலயாவில் வெகு விமர்சையாக நடந்தது.
முன்னதாக, நங்கநல்லுார் லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோவில், லட்சுமி ஹயவதனப் பெருமாள் கோவில், மடிப்பாக்கம் ஒப்பிலியப்பன் கோவில், கோதண்டடராமர் கோவில் கீழ்கட்டளை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில்;
ஆதம்பாக்கம் லட்சுமி நரசிம்மர், சிவ-விஷ்ணு கோவில் உற்சவர்கள் மற்றும் தரமணி, தேசிக தர்சன சபாவில் இருந்து நிகமாந்த மகாதேசிகன் ஆகியோர் நங்கநல்லுார் செல்லம்மாள் வித்யாலயாவிற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கு, ஆறு உற்சவர்களும் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி நிகமாந்த மகா தேசிகனுக்கு காட்சியளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
***