/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
/
மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த கோதண்டம் என்பவரது மகள் மோனிகா, 17. செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த இவர், தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சுவரில் அமர்ந்து, தன் தாயுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை மோனிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

