PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பழுதடைந்த உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பூர்கிராமம் அமைந்து உள்ளது.பெரம்பூர் பேருந்து நிறுத்தத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதை முறையாக பராமரிக்காததால், அவ்வப்போது பழுதடைந்து வருகிறது.
இதனால், இரவு நேரங்களில் அப்பகுதி கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. எனவே, உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.