/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மனைவியின் தலையுடன் சுற்றிய கணவர் கைது
/
மனைவியின் தலையுடன் சுற்றிய கணவர் கைது
PUBLISHED ON : பிப் 17, 2024 12:00 AM
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் புர்பா மேதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் குச்சாய்த், 40. இவரது மனைவி புல்ராணி குச்சாய்த்.
சமூக வலைதளம்
கடந்த 14ம் தேதி, கவுதம் - புல்ராணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவுதம், அரிவாளால் மனைவி புல்ராணியின் தலையை வெட்டினார். துண்டிக்கப்பட்ட தலையுடன், அருகே உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்ற கவுதம், அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்தார்.
இதை, அங்கிருந்த பொது மக்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், கவுதமை கைது செய்தனர்.
உ.பி.,யிலும் பயங்கரம்
உத்தர பிரதேசத்தின் பாரபங்கியைச் சேர்ந்தவர், அனில். கட்டட வேலை செய்யும் இவருக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அனில், அவரது தலையை வெட்டினார்.
துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த இவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.