sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மாமூல் போலீசார் குறித்து விசாரணை தீவிரம்!

/

மாமூல் போலீசார் குறித்து விசாரணை தீவிரம்!

மாமூல் போலீசார் குறித்து விசாரணை தீவிரம்!

மாமூல் போலீசார் குறித்து விசாரணை தீவிரம்!


PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''புகார் குடுத்தும், ஆணையம் கண்டுக்கல பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி தலைவரா இருக்கிறவர் கலைச்செல்வன்... பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த இவர், தன் தம்பிக்கு கல் குவாரி டெண்டர் எடுக்கிறதுக்காக, போன வருஷம் அக்., 30ல, கலெக்டர் ஆபீசுக்கு போயிருந்தாரு பா...

''அவங்களை தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் தடுத்து, சரமாரியா அடிச்சு, உதைச்சு, ஜாதி பேரை சொல்லியும் திட்டினாங்க... இது சம்பந்தமா, பாதிக்கப்பட்டவங்க தரப்புல டில்லியில இருக்கிற தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்துல, டிச., 19ம் தேதி நேர்ல போயே புகார் குடுத்தாங்க...

''கிட்டத்தட்ட ரெண்டு மாசமாகியும், இதுவரைக்கும் யாரும் விசாரிக்க வரவே இல்ல பா...'' என்றார், அன்வர்பாய்.

''சென்னை, பாடியில இருக்கற ஆயிரம் வருஷம் பழமையான திருவல்லீஸ்வரர் கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் நியமித்த பிறகு நிறைய முறைகேடுகள் நடக்கறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''மூணு மாசத்துக்கு முன்னாடி, கோவில்ல 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு சேர்த்திருக்கா... இதுக்கு எந்த அறிவிப்பும், நேர்காணலும் நடத்தல ஓய்...

''தங்களுக்கு வேண்டியவாளிடம், கணிசமான தொகையை வாங்கிண்டு, வேலை போட்டு குடுத்திருக்கா... இவாளுக்கு விதிப்படி ஊதியமா, 6,000 ரூபாய் தான் தரணும் ஓய்... ஆனா, 15,000 ரூபாயை குடுக்கறா... காலப்போக்குல, அவாளை நிரந்தர பணியாளர்களா மாத்தவும் ஏற்பாடுகள் நடக்கறது ஓய்...

''இதுல, ஏற்கனவே இணை கமிஷனரால பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருத்தர், மறுபடியும் ஊழியரா சேர்க்கப்பட்டிருக்கார்... கோவில் வங்கி கணக்குல இருந்து, 2 கோடி ரூபாயை சமீபத்துல எடுத்திருக்கா ஓய்...

''மாசத்துக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல கோவிலுக்கு வருமானம் வர்ற சூழல்ல, டிபாசிட் தொகையில ஏன் கை வச்சான்னு தான் தெரியல...

''அதே மாதிரி, அறநிலையத் துறை நிதியில நடக்கற திருப்பணிக்கு, கமிட்டி எதுவும் அமைக்காம இஷ்டத்துக்கு பணிகள் நடக்கறது...

''கும்பாபிஷேக பணிகள்லயும் முறைகேடு நடக்க வாய்ப்பிருக்குன்னு முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பக்தர்கள்பக்கம், பக்கமா புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கிரானைட் லாரிகளை மடக்கி, மாமூல் வசூலிக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திராவில் இருந்து, சென்னை துறைமுகம் வழியா வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்தாவ... ராத்திரி நேரங்கள்ல பெரிய, பெரிய கன்டெய்னர் லாரிகள்ல கற்களை ஏத்திட்டு வர்றாவ வே...

''இந்த லாரிகள் சென்னைக்குள்ள நுழையுறப்ப, சட்டம்- ஒழுங்கு போலீசார் மறிச்சு, 'ஓவர் லோடு'ன்னு மிரட்டி, மாமூல் வசூலிக்காவ... இந்த வசூல்ல ஈடுபடுறதுல போலீசார் மத்தியில கடும் போட்டியே நடக்கு வே...

''இது சம்பந்தமா, உளவுத்துறை விசாரிச்சு, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் டி.ஜி.பி.,க்கு அறிக்கை அனுப்பியிருக்காவ... இப்ப, வசூல் வேட்டை நடக்கிற இடங்கள், யார், யார், இந்த வேலையில ஈடுபடுறதுன்னு அந்த இடங்கள்ல இருக்கிற கண்காணிப்பு கேமரா பதிவுகளை வச்சு விசாரிக்காவ...

''சீக்கிரமே மாமூல் போலீசார் மாட்டுவான்னு சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us