PUBLISHED ON : மார் 12, 2026 06:53 AM
பென்னாகரம்:கர்நாடகா
வனப்பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட யானைகள் உணவு மற்றும்
தண்ணீர் தேடி ஒகேனக்கல், பென்-னாகரம் வனப்பகுதிகளில்
முகாமிட்டுள்ளன.
இந்த
யானைகள் கூட்டம் கூட்டமாகவும், ஒற்றை யானையா-கவும் ஒகேனக்கல் -
பென்னாகரம் சாலையை கடந்து சின்-னாற்றில் தண்ணீர் தேடி உலா வந்து
கொண்டிருக்கிறது. இவ்-வாறு சாலையை கடக்க வரும் யானைகளை கண்டு,
சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக சத்தத்துடன் ஒலி
எழுப்புகின்றனர். மேலும், செல்பி எடுத்து யானையை அச்சு-றுத்தும்
செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒகேனக்கல் சாலைகளில் வனத்துறையினர்
தொடர்ந்து ரோந்து பணி சென்று வருகின்றனர். சாலையை கடக்க யானை
நடமாட்டம் தெரிந்தால், இருபுறம் வரும் வாகனங்களை நிறுத்தி யானைக்கு வழி
விடுகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதியில் யானைகள் சாலையை
கடக்கும்-போது தொந்தரவு செய்தால் அவர்களுக்கு அபராதம்
விதிக்கப்-படும் என ஒகேனக்கல், பென்னாகரம் வனத்துறையினர்
எச்ச-ரிக்கை விடுத்துள்ளனர்.
