/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ராஜ்யசபா தேர்தலுக்கு தயாராகும் கமல் கட்சி!
/
ராஜ்யசபா தேர்தலுக்கு தயாராகும் கமல் கட்சி!
PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

“போன் இல்லாத போலீஸ் ஸ்டேஷன் தெரியுமாங்க...” என கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
“அடப்பாவமே... எந்தஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“தலைநகர் சென்னையில், தண்டையார் பேட்டை போலீஸ் ஸ்டேஷன் இருக்குதுங்க... இங்க, ரெண்டாவது மாடியில, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இயங்குதுங்க...
“இந்த ஸ்டேஷனுக்குபல மாசமா லேண்ட் லைன், மொபைல் போன்னு எதுவுமே இல்ல... இதனால, விபத்துல சிக்கி ரோட்டுலவிழுந்து கிடக்கிறவங்க, மருத்துவமனைகள்ல சிகிச்சை எடுத்துக்கிறவங்க தகவல்களை போலீசுக்கு தெரிவிக்க முடியாம பொதுமக்கள் தவிக்கிறாங்க...
“அதே நேரம், இப்படிபோன் இல்லாம இருக்கிறதை பத்தி, போக்குவரத்து போலீசாரும் பெருசா அலட்டிக்கலைங்க... 'போன் இருந்தா அடிச்சிட்டே இருக்கும்... உடனே, சம்பவ இடத்துக்கு ஓடணும்... ஒரு வகையில இது ரிலாக்சா இருக்கு'ன்னு அசால்டா பதில் சொல்றாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“எம்.எல்.ஏ., ஆபீசே வேண்டாம்னு சொல்லிட்டார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆபீஸ் ராசியில்லன்னு, அதை தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் பயன்படுத்துறதே இல்ல... முன்னாடி, மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., இருந்தப்ப கட்டிய ஆபீஸ் இது...
“அந்த ஆபீசை பயன்படுத்திய மார்க்சிஸ்ட், அப்புறம் வந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்னு யாரும் அரசியல்லஜொலிக்காம போயிட்டா ஓய்... 'பாறைக்குழியில் கட்டியஆபீஸ் வாஸ்துப்படி சரியில்ல'ன்னு செல்வராஜும் ஒதுக்கிட்டார்...
“இதனால, தன் கட்சி ஆபீஸ்லயே பொதுமக்களை சந்திக்கறார்... இந்த சூழல்ல, திருப்பூர்ல வாடகை கட்டடத்துல இருந்த, 'பிரஸ் கிளப்'காரங்க அங்க இடம் மாறிட்டா... 'கலெக்டர் ஆபீசுக்கு எதிர்ல இருக்கறதால, எங்களுக்கு தோதா இருக்கும்'னு எம்.எல்.ஏ.,கிட்ட பேசி தற்காலிகமா பயன்படுத்திண்டு இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“தேர்தலுக்கு தயாராகிட்டு இருக்காங்க வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“இப்ப எந்த தேர்தலும்இல்லையே ஓய்...” என,வியப்பு தெரிவித்தார் குப்பண்ணா.
“நான் சொல்றது ராஜ்யசபா தேர்தலை... தி.மு.க., கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் கட்சிதலைவர் கமல்ஹாசனுக்குராஜ்யசபா எம்.பி., சீட் தர்றதா ஒப்பந்தம் போட்டிருக்காங்கல்லா...வர்ற ஜூன்ல ராஜ்யசபாதேர்தல் நடக்க இருக்கு வே...
“கமல் கட்சியின் பொதுச்செயலர் அருணாசலம், வக்கீல் அணியின் அர்ஜுன் ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சமீபத்துல பார்த்து, ராஜ்யசபா தேர்தல் நடைமுறைகள் சம்பந்தமா விளக்கம் கேட்டுட்டு வந்திருக்காவ...
“ராஜ்யசபா தேர்தல்லகமல் வேட்புமனு தாக்கல்செய்றதுக்கான ஆவணங்கள், அதுல இணைக்கவேண்டிய சொத்து விபரங்கள் எல்லாத்தையும் இப்பவே தயார் பண்ணிட்டு இருக்காவ வே...
“இப்ப, அமெரிக்காவுலஇருக்கிற கமல், பொங்கல்பண்டிகைக்கு ஊர் திரும்புதாரு... அவர் திரும்பியதும், அவரிடம்எல்லா ஆவணங்களையும் காட்டி, கையெழுத்துவாங்குறதுக்கு தயாராகிட்டு இருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

