/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கான்பூர் - பெங்களூருக்கு பெரம்பூர் வழி சிறப்பு ரயில்
/
கான்பூர் - பெங்களூருக்கு பெரம்பூர் வழி சிறப்பு ரயில்
கான்பூர் - பெங்களூருக்கு பெரம்பூர் வழி சிறப்பு ரயில்
கான்பூர் - பெங்களூருக்கு பெரம்பூர் வழி சிறப்பு ரயில்
PUBLISHED ON : ஏப் 26, 2025 12:00 AM
சென்னை, உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பெரம்பூர் வழியாக எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
★ கான்பூரில் இருந்து, வரும் 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1ம் தேதிகளில் இரவு 7:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி வழியாக, புறப்படும் நாளில் இருந்து, அடுத்த மூன்றாவது நாளில் மாலை 6:30 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செல்லும்
★ எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து, வரும் 30, மே 7, 14, 21, 28 ஜூன் 4ம் தேதிகளில் காலை 7:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக, அடுத்த மூன்றாவது நாள் அதிகாலை 2:00 மணிக்கு கான்பூர் செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

