/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
5 கிலோ கஞ்சா பறிமுதல் கேரள இளைஞர் கைது
/
5 கிலோ கஞ்சா பறிமுதல் கேரள இளைஞர் கைது
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிறுத்தத்தில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த, கேரளாவை சேர்ந்த சபிக், 34, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
சபிக் வைத்திருந்த பையில், 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சபிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.