/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
/
நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

ஏகனாம்பேட்டை:காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டை நடுத்தெருவில், சித்தி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியினர் முடிவு செய்தனர். அதன்படி பல்வேறு திருப்பணிகளுடன், நித்ய கல்யாண பெருமாள் சன்னிதி புதிதாக கட்டப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 28 ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி, நவக்கிரஹ லட்சுமி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கும்பஸ்தானம், வேதபிரபந்தம், ஹோமம் நடந்தது.
நேற்று காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை, யாத்ராதானம் சங்கல்பம் உள்ளிட்டவையும், காலை 9:00 வேதவிற்பன்னர்கள் விநாயக பெருமானுக்கும், தொடர்ந்து நித்ய கல்யாண பெருமாளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத நித்ய கல்யாண பெருமாளுக்கு திருக்கல்யாண உத்சவமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது.