sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

விவசாயிகள் போர்வையில் ஏரி மண் கொள்ளை!

/

விவசாயிகள் போர்வையில் ஏரி மண் கொள்ளை!

விவசாயிகள் போர்வையில் ஏரி மண் கொள்ளை!

விவசாயிகள் போர்வையில் ஏரி மண் கொள்ளை!

3


PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''இதாவது கிடைச்சுதேன்னு சந்தோஷப்படுதாவ வே...'' என்றபடியே,பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாருங்க அது...'' எனகேட்டார், அந்தோணிசாமி.

''பா.ஜ.,வுல சீட் கிடைக்காத அதிருப்தியில்இருந்த நடிகை கவுதமி, பா.ஜ., சிறுபான்மையினர்பிரிவுல மாநில நிர்வாகியாஇருந்த பாத்திமா அலி ஆகியோரை, அந்த கட்சியில ஏற்கனவே இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், அ.தி.மு.க.,வுக்குஅழைச்சிட்டு வந்தாரு...

''வர்றப்பவே, இவங்களுக்கு கவுரவமானபதவி தரப்படும்னு சொல்லியிருந்தாவ... அதுலயும் கவுதமி, கொள்கை பரப்பு செயலர்பதவியை எதிர்பார்த்து வந்தாங்க வே...

''அவங்களுக்கு ஆறுதல் பரிசா, கொள்கைபரப்பு துணை செயலர் பதவி தந்திருக்காவ... அதே மாதிரி, மாநில மகளிர் அணி செயலர் பதவியை எதிர்பார்த்த பாத்திமா அலிக்கு சிறுபான்மையினர் பிரிவு துணை செயலர் பதவி குடுத்திருக்காவ... இதை ஆறுதல் பரிசா நினைக்கிற ரெண்டு பேரும், கட்சி பணிகள்ல தீவிரமா ஈடுபட இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''பெண் அதிகாரி மேல புகார்கள் குவியுது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் அதிகாரியாஇருக்கிற பெண்மணி, போன வருஷம் ஜூலையில் தான் இங்க வந்திருக்காங்க... இந்த வருஷம் பிப்ரவரியில, அவங்களை தர்மபுரிக்கு மாத்திட்டாங்க பா...

''ஆனாலும், ஆளுங்கட்சியினர் சிபாரிசுல, மறுபடியும்பாப்பிரெட்டிப்பட்டிக்கேவந்துட்டாங்க... எந்த சான்றிதழா இருந்தாலும்,'கவனிப்பு' இல்லாம கையெழுத்து போட மாட்டாங்க பா...

''கவனிக்கிறவங்களை,சாயந்தரம் 7:00 மணிக்குமேல அலுவலகம் வரவழைச்சு, கையெழுத்துபோட்டு குடுக்குறாங்க...தன்னை கவனிக்கிற கீழ்மட்ட அதிகாரிகள்,கிராம நிர்வாக அதிகாரிகளை வாங்க,போங்கன்னு மரியாதையாபேசுறாங்க பா...

''ஆனா, நேர்மையா இருந்து, தன்னை கவனிக்காதவங்களை ஒருமையில பேசுறதும், திட்டுறதுமா இருக்காங்க...அதே மாதிரி, நேர்மையானகீழ்மட்ட அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமலேயேஜாதி சான்றிதழ், பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ்களை வாரி வழங்குறாங்க...இவங்களை பத்தி கலெக்டர் வரைக்கும் புகார் போயும், ஆளுங்கட்சி செல்வாக்கால நடவடிக்கை எடுக்காம இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''மண்ணை வித்து காசு பார்க்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி வருவாய் கோட்டத்துல விவசாய நிலங்களை மேம்படுத்த,ஏரியில் இருந்து வண்டல்மண்ணை விவசாயிகள்இலவசமா எடுத்துக்கலாம்னு, மாவட்ட நிர்வாகம் அனுமதி குடுத்திருக்கு... இதுக்கு, 'ஆன்லைன்'ல விவசாயிகள் விண்ணப்பிக்கணும் ஓய்...

''இந்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள்ஆய்வு பண்ணி, மண்எடுக்க அனுமதி தருவா...ஒரு விவசாயி அதிகபட்சமா, 70 யூனிட் மண் தான் எடுக்க முடியும் ஓய்...

''ஆனா, விவசாயிகள்பெயர்ல நிறைய பேர், ஆன்லைன்ல போலியா விண்ணப்பிச்சு, ஒவ்வொருஏரியிலும், நுாற்றுக்கணக்கான யூனிட் மண்ணைஅள்ளறா... இந்த மண்ணை, ரியல் எஸ்டேட் அதிபர்கள், புது வீடு கட்டறவா, செங்கல் சூளைகளுக்கு, 1 யூனிட் 2,000 - 3,000ரூபாய் வரை வித்து லட்சக்கணக்குல சம்பாதிக்கறா... இதுக்கு வருவாய்மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளும் ஒத்தாசையாஇருக்கா ஓய்...'' எனமுடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.






      Dinamalar
      Follow us