தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மண் திருட்டு,ஆக்கிரமிப்பால் சுருங்கும் மைதீன் ராவுத்தர் குளம்

 மண் திருட்டு,ஆக்கிரமிப்பால் சுருங்கும் மைதீன் ராவுத்தர் குளம்

 மண் திருட்டு,ஆக்கிரமிப்பால் சுருங்கும் மைதீன் ராவுத்தர் குளம்


PUBLISHED ON : பிப் 01, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2026 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு மைதீன் ராவுத்தர் குளத்தில் தொடர்ந்து மண் திருட்டு நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளது. குளம் , வரத்து வாய்க்காலை துார்வார வேண்டும்.

தாடிக்கொம்பு அய்யம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது மைதீன் ராவுத்தர் குளம். 16 ஏக்கரில் உள்ள இக்குளத்திற்கு வரட்டாற்றில் இருந்து அணைமேடு வரத்து வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும் நீர்வழிப் பாதை உள்ளது. தற்போது இந்த வாய்க்கால் முட்கள் நிறைந்து மண் மேடாகி விட்டது. இதனால் நீர்வரத்து முற்றிலுமாக பாதிக்க குளம் வறண்டு கிடக்கிறது.

சில மாதங்களாக தொடர் மண் திருட்டு நடைபெறுவதால் இரண்டு ஆள் ஆழத்திற்கு பள்ளம் தோண்ட ராட்சத குழியாய் காட்சியளிக்கிறது. மழைக் காலங்களில் குளம் நிறைந்தால்ஆடு மாடு மேய்ப்போர் விபத்துக்கு ஆளாக நேரிடும். குளத்தின் எஞ்சிய பகுதி முழுவதும் கருவேல முட்களின் காடாய் காட்சியளிக்கிறது. ஆக்கிரமிப்புகள் அதிகரித்து குளமே சுருங்கி வருகிறது. குளத்தில் உள்ள கருவேல முட்களை அகற்றி முறையாக துார்வார வேண்டும். இதேபோல் குளத்தின் உட்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.

மண் திருட்டால் பாதிப்பு எஸ்.காசிராஜன், சீத்த சாலைப்புதுார், தாடிக்கொம்பு: குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் துார்ந்து விட்டது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வருவது நின்றுவிட்டது. தற்போது குளம் பகுதியில் கருவேல முட்கள் மட்டுமே பசுமையாய் காட்சியளிக்கின்றன. சமீபகாலமாக மண் திருட்டு நடைபெறுவதோடு குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளன. ஆடு மாடு மேய்ப்பவர்கள் கூட சுதந்திரமாக குளத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

ஆக்கிரமிப்பை அகற்றி எல்லைக்கல் டி.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர், வேடசந்துார்: தாடிக்கொம்பு பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்தபோது வருவாய்த்துறை ஒத்துழைப்புடன் குளத்தை முறையாக அளந்து கல் ஊன்றி குளம் பாதுகாக்கப் பட்டது.

தற்போது கேள்வி கேட்க யாரும் இல்லாததால் இரவு பகலாக மண் திருட்டு நடைபெறுகிறது. இரண்டு ஆள் ஆழத்திற்கு பள்ளம் தோண்டிவிட்டனர். கருவேல முட்கள் நிறைந்து காணப்படுகின்றன. குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

பேரூராட்சி நிர்வாகம் குளம் ,வரத்து வாய்க்காலை முறையாக துார்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லைக்கல் ஊன்ற வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us