/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மணவாடி வாய்க்கால் துார் வார கோரிக்கை
/
மணவாடி வாய்க்கால் துார் வார கோரிக்கை
PUBLISHED ON : ஜூன் 28, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,மணவாடி வாய்க்காலை துார்வார வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் அருகில், மணவாடியில் பாசன வாய்க்கால் செல்கிறது. இதில், செடி கொடிகள் படர்ந்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மண்ணோடு மண்ணாக கலந்துள்ளது. சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி, வாய்க்காலை துார் வார வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். துார்வாரினால்தான், இனி வரும் மழை காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும். தற்போது வாய்க்கால் மோசமான நிலையில் இருப்பதால், விவசாயிகள் இப்பகுதியில் சாகுபடி செய்வதை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.