தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ காங்., தலைவர் கைபொம்மையாக செயல்படும் அமைச்சர்!

 காங்., தலைவர் கைபொம்மையாக செயல்படும் அமைச்சர்!

 காங்., தலைவர் கைபொம்மையாக செயல்படும் அமைச்சர்!


PUBLISHED ON : மே 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“த மிழக வெற்றிக் கழகம் கட்சியில் கோஷ்டிப்பூசல் கொடிகட்டி பறக்கறது ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.

“ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான விஜய் பாலாஜி, த.வெ.க., மாநகர் மாவட்ட செயலரா இருக்கார்... மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆனந்த மோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரா இருக்கார் ஓய்...

“இவா ரெண்டு பேருமே தனித்தனி கோஷ்டியா செயல் படறா... 'ஆனந்தமோகனுக்கு நான் தான், 'சீட்' வாங்கி தந்தேன்'னு விஜய் பாலாஜியும், 'நான் சொல்லி, என் சமுதாயத்தினர் போட்ட ஓட்டுகளால தான், விஜய் பாலாஜி ஜெயிச்சார்'னு ஆனந்த் தரப்பும் சொல்லிண்டு இருக்கா ஓய்...

“சமீபத்தில், காளிங்க ராயன் விடுதியில் இருந்த விஜய் பாலாஜியை, கட்சி நிர்வாகிகள் பார்த்து வாழ்த்து தெரிவிச்சா... அவரை பார்க்க வந்த ஆனந்தமோகனை ரொம்ப நேரம் காத்திருக்க வச்சு, கடைசியா அவர் தந்த பொக்கேவை வாங்கிண்டு, 'சரி போயிட்டு வாங்க'ன்னு அனுப்பிட்டார் ஓய்...

“அப்புறமா ஆனந்த மோகன், தன் எம்.எல்.ஏ., அலுவலக திறப்பு விழாவை நடத்தினார்... மாவட்ட செயலர் என்ற முறையில் இதுக்கு போகாத விஜய் பாலாஜி, 'கட்சியினர் யாரும் போகப்டாது'ன்னும் உத்தரவு போட்டிருக்கார்... 'இவா கோஷ்டிப் பூசல் முன்னாடி, காங்கிரசார் எல்லாம் நிற்கவே முடியாது'ன்னு, த.வெ.க., தொண்டர்கள் புலம்பறா ஓய்...” என்றார், குப்பண்ணா.

“ஆளாளுக்கு நாட்டாமை பண்றாங்க...” என்றார், அந்தோணிசாமி.

“எங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.

“காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., தென்னரசு, வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவும், காஞ்சிபுரம் தொகுதியில் ஜெயிச்ச ரஞ்சித்குமார், வனத்துறை அமைச்சராகவும் ஆகியிருக்காங்க...

“இவங்களுக்கு, தொகுதியில் நிறைய நண்பர்களும், ஆதரவா ளர்களும் இருக்காங்க... இவங்கள்ல சிலர், கலெக்டர் அலுவலக அதிகாரி களுக்கு போன் போட்டு, 'நான் அமைச்சர் பி.ஏ., பேசுறேன்'னு சொல்லி, சில காரியங்களை முடிச்சு தரும்படி கேட்கிறாங்க...

“நேரத்துக்கு ஒருத்தர் இப்படி பி.ஏ.,ன்னு பேசுறதால, அமைச்சருக்கு எத்தனை பி.ஏ.,க்கள் தான் இருக்காங்கன்னு தெரியாம, அதிகாரிகள் மண்டையை பிய்ச்சுக் கிறாங்க...” என்றார், அந்தோணிசாமி.

“காங்., மாவட்ட தலைவர் கட்டுப்பாட்டுல இருக்காரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“முதல்வர் விஜயின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீநாத், துாத்துக்குடி தொகுதியில் ஜெயிச்சு, மீன்வளத் துறைக்கு அமைச்சராகிட்டாருல்லா... மீனவ சமுதாய பிரதிநிதிகளும், த.வெ.க., முக்கிய நிர்வாகிகள் பலரும், தங்களது சொந்த பணத்தை தண்ணீரா செலவு பண்ணி, ஸ்ரீநாத்தை ஜெயிக்க வச்சாவ வே...

“ஆனா, ஜெயிச்ச பிறகு அவங்களை ஸ்ரீநாத் கண்டுக்கவே இல்ல... கூட்டணி கட்சியான, காங்., வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி என்ன சொல்றாரோ, அதை தான் கேட்காரு வே...

“சமீபத்துல பெருமாள்சாமிக்கு சொந்தமான, 'ரிசார்ட்'ல, மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகளுக்கு ஸ்ரீநாத், 'பார்ட்டி' குடுத்திருக்காரு... பெருமாள்சாமி எழுதி தரும் அறிக்கையில் கையெழுத்தை போட்டுட்டு சென்னைக்கு பறந்துடுதாரு... 'மீனவர்கள் அதிகம் வசிக்கிற மாவட்டத்துல ஜெயிச்சு, மீன்வளத் துறைக்கு அமைச்சராகிட்டு, இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி'ன்னு த.வெ.க.,வினர் புலம்புதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us