தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஊட்டச்சத்து பெட்டகம் அமைச்சர் வழங்கினார்

ஊட்டச்சத்து பெட்டகம் அமைச்சர் வழங்கினார்

ஊட்டச்சத்து பெட்டகம் அமைச்சர் வழங்கினார்


PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆலந்துார்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பச்சிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதை தவிர்க்க, ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகளின் பெண்கள் பயன்பெறும் வகையில், 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' எனும் திட்டம், 2022ல் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிதியாண்டில் இரண்டாம் கட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இதில், மாநிலம் முழுதும் 76,705 பெண்கள் பயன்பெறுவர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் வாயிலாக, சென்னை நகரில், 1,401 மிதமான ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட, ஆறு மாதம் வரையிலான குழந்தைகளின் பெண்களுக்கும், கடுமையான எடை குறைபாடு கொண்ட குழந்தைகளின் பெண்கள், 408 பேருக்கும் வழங்கப்படுகிறது.

அதன் முதல்கட்டமாக ஆலந்துார், சோழிங்கநல்லுார் தொகுதியில், 138 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணி துவக்கப்பட்டது.

சென்னை, பழவந்தாங்கல், அங்கன்வாடியில் நடந்த இந்நிகழ்ச்சியில், தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான அன்பரசன் பங்கேற்று, ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இதில், மண்டல குழு தலைவர் சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

ஊட்டச்சத்து பெட்டகபிளாஸ்டிக் கூடையில்பேரிச்சம் பழம் 1 கிலோ, நெய் அரை கிலோ, புரோட்டின் பவுடர் 1 கிலோ, 'ஆஸ்டிபர் -இசட்' சிரப் -600 மி.லி., கோப்பை, டவல், மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us