sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

காலில் வெந்நீர் ஊற்றியபடி ஓடிய அமைச்சர்!

/

காலில் வெந்நீர் ஊற்றியபடி ஓடிய அமைச்சர்!

காலில் வெந்நீர் ஊற்றியபடி ஓடிய அமைச்சர்!

காலில் வெந்நீர் ஊற்றியபடி ஓடிய அமைச்சர்!

3


PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“பதவியை நிரப்பாமலேவிட்டு வச்சிருக்காவ வே...”என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“எந்த துறையிலங்க...”என கேட்டார், அந்தோணிசாமி.

“கோவை மாநகராட்சியில்முக்கியத்துவம் வாய்ந்தநகர பொறியாளர் பதவி,ரொம்ப நாளாவே காலியாகிடக்கு... இதை, இன்னொரு முக்கிய அதிகாரிதான் கவனிச்சிட்டு இருக்காரு வே...

“சமீபத்துல தீபாவளிவந்துச்சுல்லா... இதுக்கு,துறையின் முக்கிய புள்ளியை, அவரது சொந்த ஊர்ல அதிகாரிகள் எல்லாரும் போய் பார்த்து, வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காவ... முக்கிய புள்ளியை, வெறும் கையோட போய்பார்க்க முடியுமா வே...

“அவங்கவங்க தகுதிக்குஏத்த மாதிரி, தங்க நாணயங்களை பரிசா குடுத்திருக்காவ... இதுல,ரெண்டு துறைகளை சேர்த்து பார்க்கிற அதிகாரி,5 சவரன் நாணயத்தை பரிசா குடுத்திருக்காரு... இதனால, 'நகர பொறியாளர் பதவியை இப்போதைக்கு நிரப்பாம, 5 சவரன் அதிகாரியே நீடிப்பார்'னு கோவை மாநகராட்சி வட்டாரத்துலபேசிக்கிடுதாவ வே...” என்றார், அண்ணாச்சி.

“ரூம் குடுக்க ஏகப்பட்ட,'கண்டிஷன்ஸ்' போடறாஓய்...” என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.

“யாருப்பா அது...” எனகேட்டார், அன்வர்பாய்.

“சென்னை, கோயம்பேடு பகுதியில் சமீபத்துல,அனைத்து லாட்ஜ் உரிமையாளர்கள், ஊழியர்கள் பங்கேற்ற கூட்டத்தை போலீஸ் அதிகாரிகள் கூட்டியிருந்தா... அப்ப, 'காலேஜ்பசங்க, திருநங்கையர், வெளிநாட்டவர், உள்ளூர்வாசிகளுக்கு சில மணி நேரத்துக்கு ரூம் வாடகைக்கு விடக்கூடாது... அப்படி குடுத்தா, மேலாளர்கள், உரிமையாளர்கள் மேல வழக்கு போடுவோம்'னு சொல்லியிருக்கா ஓய்...

“லாட்ஜ் உரிமையாளர்கள் தரப்போ, 'திருநங்கையருக்கு ரூம் வழங்க கூடாதுன்னு எந்த சட்டத்துலயும் சொல்லல... பக்கத்து மாவட்டங்கள்ல இருந்து சென்னைக்கு சிகிச்சை, இன்டர்வியூன்னுவர்றவங்க மணிக்கணக்குலதான் ரூம்கள் எடுப்பா... போலீசார் சொல்றதை கேட்டா, எங்க தொழில் கடுமையா பாதிக்கப்படும்'னு புலம்பறா ஓய்...”என்றார், குப்பண்ணா.

“கால்ல வெந்நீரை கொட்டிய மாதிரி ஓடுறாருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

“தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், சமீபத்துல திருநெல்வேலி யில் தனியார் மருத்துவ மனை திறப்பு விழாவுக்கு வந்தார்... அதுக்கு மட்டும் வந்ததா இருக்க கூடாதுன்னு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் புதுப்பிக்கப்பட்ட ரெண்டு கட்டடங்களை பெயரளவுக்கு திறந்து வச்சாருங்க...

“அவரிடம் கோரிக்கை மனு குடுக்க டாக்டர்கள், நர்ஸ்கள் எல்லாம் காத்திருந்தாங்க...அவங்களை எல்லாம் பார்க்காத அமைச்சர், அவசர அவசரமா, தனியார் மருத்துவமனை நிகழ்ச்சிக்கு போயிட்டாருங்க...

“அவர் எந்த ஊருக்கு போனாலும், காலையில்,'வாக்கிங், ஜாக்கிங்' போவாருங்கிறதால, அவர் தங்கிய இடத்துல இருந்து 3 கி.மீ.,க்கு சாலையோர ஆக்கிரமிப்புகள், தற்காலிக கடைளைஅகற்றி, பிளீச்சிங் பவுடர்எல்லாம் துாவி பளிச்சுன்னு வச்சிருந்தாங்க... ஆனா, அமைச்சர் வரவே இல்லைங்க...

“இதனால, 'அமைச்சர் எப்ப இங்க வந்தாலும்,கால்ல வெந்நீரை கொட்டிய மாதிரி பரபரன்னு ஓடிடுறாரு... எங்களது குறைகளை காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறார்'னு சுகாதார துறையினர் புலம்புறாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.

பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.






      Dinamalar
      Follow us